1) வறுமையிலும்
வயிறு நிறைந்திருந்தது
கர்ப்பிணிப் பெண்.
2) கட்டில் ஆடாமல்
தொட்டில் ஆடியது
சோதனைக் குழந்தை.
3) அடகு கடையிலும்
மெட்டி ஒலி
என்ன வறுமையோ அவளுக்கு.
4) குடைக்குள் மழை-சினிமா
குடிசைக்குள் மழை
வாழ்க்கை !
5) மனிதக்காலை
யானைக்காலாக்கும் மந்திரவாதி
கொசு !
6) அமெரிக்கா போக ஆசை
மந்திரிக்கு வந்தது
முதுகு வலி !
7) ஆயுத தடுப்பு சட்டம்
அரிவாளை கீழே போடு
அய்யனாரே !
நன்றி; வசந்தம் ( 3-10-04 )
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment