கன்னி ஒருத்தியிடம்
முத்தம் ஒன்று நான் கேட்டேன்
அவளோ முதலில் சத்தியம் செய்
பின் பார்ப்போம் என்றாள்.
''சொர்க்கத்தின் மீது சத்தியம்'' என்றேன்
''அது எட்டாத உயரத்தில்'' என்றாள். ''கடலின் மீது சத்தியம்'' என்றேன்
''அது ஆழம் அதிகம் ''என்றாள்.
''கோயிலின் மீது சத்தியம்'' என்றேன்.
''அது வெறும் கல்லும் சுண்ணாம்பும்தானே'' என்றாள்.
''சாமி சிலை மீது சத்தியம்'' என்றேன். அது வர்ணம் பூசப்பட்ட பொம்மைதானே என்றாள்.
சரி,என் இளமையின் மீது சத்தியம் என்றேன்.
''போய்யா ! பொய்யன் நீ '' என்றாள் !
நன்றி' கிரேக்க காதல் கவிதைகள் -
(மொழி பெயர்ப்பு-கவிஞர் ராஜ்ஜா)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment