
பைசா கோபுரம் சாய்வதை நிறுத்தியது!
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் முதல் முறையாக சாயாமல் நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 800 ஆண்டுகளில் முதல் முறையாக இப்போதுதான் சாய்வதை நிறுத்தியுள்ளது இந்தக் கோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.இத்தாலியின் பைசா நகரத்தில் உள்ள இந்த சாய்ந்த கோபுரம் உலக அதிசயங்களுல் ஒன்றாக கருதப்படுகிறது. 14 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த கோபுரம், 1174ம் ஆண்டு முதல் 1370ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் பல கட்டங்களாக கட்டப்பட்டது.கோபுரம் கட்ட ஆரம்பித்த பின்னர் மெதுவாக சாயத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து இன்ச், இன்ச்சாக சாய்ந்து வந்தது. இதனால்தான் இக்கோபுரத்திற்கு சாய்ந்த கோபுரம் என்ற பெயர் வந்தது.இந்த நிலையில் கோபுரம் சாயாமல் தடுக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்தத் திட்டத்திற்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. தற்போது முதல் முறையாக கோபுரம் சாயாமல் நின்றுள்ளது.கடந்த 800 ஆண்டுகளில் கோபுரம் சாயாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் 300 ஆண்டுகளுக்கு கோபுரம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். Source: Oneindia
0 comments:
Post a Comment