பல் மருத்துவம்-சில உண்மைகள் !

ஒரு மருத்துவரிடம் பல் நோவுக்கெனச் சிகிச்சைக்குச் சென்றிருந்தபோது பொய்ப்பல் கட்ட அளவுகள் எடுத்துப் பூர்வாங்கப் பணிகள் துவக்கப்பட்ட அமர்வில், மெழுகுக் கலவையின் சூடாக்கிய பல்வடிவை வாயினுள் இட்டு , முகத்தின் மீது செல்லோ டேப் பலவாறாக ஓட்டிவிட்டு 61, 62. 63, 64, 65, 66. வரை ஆங்கிலத்தில் உறக்க உச்சரிக்கக் கூறினார். அவரது கூற்றின்படி உச்சரித்து வாய் கழுவி எழும் போது அவருக்குப் பிரியமான மந்திர எண்களாஅவை ? எனக் கேட்டேன். அவர் முறுவல் பூத்து இதுநாள் வரையில் என் அனுபவத்தில் இப்படி ஒரு கேள்வியை எவரும் கேட்டதில்லை என்று கூறி விளக்கம் சொல்லிப் பாராட்டினார். அந்த எண்கள் வாயின் உதடுகளின் குவிப்பு, நாவின் சுழற்சி, மடிப்பு, திண்மை,மென்மை, வலிமை இவற்றின் தொகுப்பாக அந்த எண்களின் உச்சரிப்பு இருக்கும். அதனை வைத்து உங்கள் உட்தாடையினில் பல்செட் எவ்வாறு பொருந்துகின்றது என்பதை நிர்ணயிக்க முடியும் என்றார். என் கேள்வி மிகவும் அற்பமானதாகத் தென்பட்டாலும் அதன் உண்மைப் பொருளைக் கூறிய அம்மருத்துவரை நான் மிகவும் மதிக்கிறேன்.

நான் தொடர்ந்து மின்னஞ்சலில் பெற்று படிக்கும் பயனுள்ள
வலைத்தளம் http://pkp.blogspot.com ஆகும். ஒரு மூத்த குடிமகன் தனது
அனுபவத்தை இவ்வலையில் பகிர்ந்து கொண்டுள்ளார்
பயனுள்ள தகவல் என்பதால்,எனது பதிவில் இட்டுள்ளேன்.

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது