அலங்கரித்த மாலையுடன்
அசை போடும் ஆட்டிற்கு
தெரியவில்லை விரைவில்
அறுபடும் தன் தலை
துடித்திடும் உடல் என்று !
மின்னிடும் பட்டில் கண்களில் களிப்புடன்
தலை குனியும் மணப்பெண்ணுக்குத்
தெரியவில்லை இனிதான் சுமையென்று !
மழைத்தண்ணீரில் ஓய்வின்றி கத்தும்
வறட்டுத் தவளைக்குத் தெரியவில்லை
வாழ்க்கை சில நாளென்று`!
கூட்டினுள் இருக்கும் குஞ்சுகள் தனதென்று
காத்திடும் காக்கைக்குத் தெரியவில்லை
குயில் குஞ்சும் உண்டென்று !
ஏமாற்றிப் பிழைத்து ஏராளமாய் சேர்த்திடும்
எத்தனுக்குத் தெரியவில்லை எமன் வரும்போது
எதுவும் உடன் வருவதில்லை என்று !
நன்றி; இராம.விஜயலட்சுமி (உறவி-தமிழ் மாத இதழ்)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment