உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினர்கள்
சொன்ன கதைகளை குழந்தைகள் வாசிப்பதற்காக
'கால் முளைத்த கதைகள்' என்ற தலைப்பில் மொழி
பெயர்த்து தொகுத்தளித்துள்ளார் திரு.எஸ்.ராமகிருஷ்ணன்.
(உயிர்மை பதிப்பக வெளியீடு)
அதிலிருந்து சீன பழங்குடியினர் சொன்ன ஒரு கதை;
சிலந்தி ஏன் பூச்சிகளைப் பிடிக்கிறது ?
பூச்சிகள்,பறவைகள் யாவும் கல்வி கற்றுக்கொள்ள
வேண்டும் என்று கடவுள் ஒரு நாள் ஆணையிட்டார்.
அதனால் பூச்சிகள் படித்து அறிவாளியாகிவிட்டன.
சிலந்தி தானும் கல்வி கற்க வேண்டும் என்று
ஆசைப்பட்டு பூச்சிகளிடம் தனக்குப் பாடம் சொல்லித்
தருமாறு கேட்டது.பூச்சி அதற்கு நீ ஒரு முட்டாள்,
உனக்கு எதற்குப் படிப்பு என்று கேலி செய்தது.
2) சிலந்தி பல நாட்கள் யோசித்துவிட்டு பிறகு படித்த
பூச்சிகளைப் பிடித்து தின்று விட்டால் தான் அறிவாளி
ஆகிவிடலாம் என்று முடிவு செய்தது. அன்றிலிருந்துதான்
சிலந்திகள் பூச்சிகளைப் பிடித்து தின்னத் துவங்கின.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment