பாற்கடலிலிருந்து லக்ஷ்மி வந்தாள்.
ஐராவதம் வந்தது. உச்சிஸ்வரஸ் வந்தது. ஆலகால விஷம் வந்தது. கடைசியில் அமிர்தமும் வந்தது.
யானையையும் குதிரையையும் இந்திரன் எடுத்துக்கொண்டான்.
லக்ஷ்மியை விஷ்ணு மார்பில் வைத்துக்கொண்டார்.
சிவனுக்கு விஷம் பங்காயிற்று. தேவர்களுக்கு அமிர்தம்.
கூடக்கடைந்த அசுரர்கள் ஏமாந்து போனார்கள்.ஏனெனில்
தேவர்கள் நல்லவர்கள்.அசுரர்கள் கெட்டவர்கள். 'அளவு கோல்' தேவாதி தேவனுடையது.
நீ அவல் கொண்டு வா- நான் உமி கொண்டு வருகிறேன்.
கலப்போம்.நீ ஊது. நான் தின்கிறேன்.
இந்த அநியாயம் அன்றிலிருந்தே வழங்கி வருகிறது.
நன்றி; லா.ச.ராமாமிர்தம் ( பாற்கடல்-நாவல் )
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment