மன்னர் சிவாஜி புத்த சந்நியாசியின் பாதத்தில்
சிரசை வைத்து வணங்கினார். இதைக் கண்டு மந்திரி
மனம் பதறினார்.
அரசர், மந்திரியிடம் செம்மறியாட்டின் தலை,வெள்ளாட்டின்
தலை, ஒரு மனிதத் தலை கொண்டு வரச்சொன்னார்.
அவ்வாறு கொண்டு வந்ததும், அவைகளை சந்தையில்
விற்று வரச்சொன்னார்.
மனிதத் தலையை மட்டும் விற்க இயலவில்லை,வாங்குவார்
யாரும் இல்லை என்றார் மந்திரி. இலவசமாக கொடுத்து வா
என்றார் அரசர். இலவசமாக ஏற்றுக் கொள்ள ஒருவர் கூட
முன்வரவில்லை என்றார் மந்திரி.
''அதனால்தான் நான் புத்த சந்நியாசியின் பாதம் பணிந்து
நான் பிறவி எடுத்த பயனைப் பெற்றேன் '' என்றார் அரசர்.
(சக்தி-தீபாவளி மலரில் படித்தது)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment