கடலைக் காட்டுதல்

கடலைக் காட்டுவதற்காக
கூழாங்கற்களை
உருட்டிச் சென்றது
நதி
(பா.விஜயராமன்,திட்டச்சேரி.)

அலங்கோலம்;-
கிறுக்கல்களற்ற சுவர்கள்
அடுக்கி வைக்கப்பட்ட
அலங்காரப் பொருட்கள்
ஒழுங்காக மாட்டப்பட்ட
ஓவியங்கள்

ஒவ்வொரு பொருளும்
அதனதன் இடத்தில் என
காட்சியளிக்கிறது
குழந்தைகளற்ற வீடு.

(வடுவூர் சிவ.முரளி,புலிவலம்.)

மனசு ;-

மகள் பேச்சை மாப்பிள்ளை
தட்டவே மாட்டார் என்று
பெருமிதப்படும் அதே அம்மாதான்
கல்யாணத்திற்குப் பிறகு மகன்
'பொண்டாட்டிதாசன்'
ஆகிவிட்டான் என்று
வருத்தப்படவும் செய்கிறாள்.. . .!

(புவனா நித்திஷ்,திருமாளம்)

நன்றி ; குங்குமம் (27-9-07)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது