இராமனுடைய பட்டாபிஷேகம் முடிந்ததும்,
ஆஞ்சநேயரை அயோத்தியில் தங்க அனுமதிக்காமல்
திரும்பி போக சொன்னார் ஸ்ரீராமர்.
இந்திரஜித்தின் பிரும்மாஸ்திரத்தினால் தாக்குண்ட
இலக்குவனைக் காப்பாற்ற, இமயமலையில்
பயிராகி இருந்த சஞ்சீவி என்ற மூலிகையைக்
கொணரும் பணி அனுமனுக்குத் தரப்பட்டது. தம்பியின்
உயிர் காப்பாற்றப் பட்டதும் ''ஆஞ்சநேயரே நீங்கள்
என் தந்தையாகி விட்டீர்கள்'' என்றார் ஸ்ரீராமர்.
ஸ்ரீராமன் தன்னை ஏன் திரும்பி போகச் சொன்னார்
என்பது அனுமனுக்குப் புரிந்தது.
தகப்பனாரை மகன் அடிமையாக நடத்தக் கூடாது !
(சிந்திக்க வைக்கும் 35 கதைகள்-என்ற புத்தகத்திலிருந்து)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment