புதுவகைப்பொய்கள்;
நல்லவனை மிக நல்லவன் ஆக்குவதும் கல்வி,
கெட்டவனை மிக கெட்டவன் ஆக்குவதும் கல்வி
என்று சீனப்பழமொழி கூறுகிறது.
பெர்னாட்ஷா எழுதிய "மதுசலாவுக்குத்திரும்ப' என்னும்
நாடகத்தில் விஞ்ஞானிகள் சிலர் சேர்ந்து மனிதனையே
படைக்க முயற்சி செய்கிறார்கள். பல வகை முயற்சிகளில்
தோற்றுத் தோற்றுக் கடைசியில் மனிதனைப் போன்ற
ஒன்றை படைக்கிறார்கள். அந்த படைப்பை வந்து பார்க்கிறவர்கள்,
அது மனிதனை ஒத்திருக்கிறதா என்று சோதனை செய்து
பார்க்கிறார்கள். அது பொய் சொல்கிறதா என்று ஆராய்கிறார்கள்.
பொய் சொல்லத்தெரியாத காரணத்தால் இன்னும் சரியான
மனிதனைப் படைக்க முடியவில்லை என்று முடிவு செய்கிறார்கள்.
மனிதனுடைய வாழ்க்கையில் பொய் அவ்வளவு வேறூன்றி
உள்ளது என்பதை நாடக ஆசிரியர் விளங்கச் சொல்கிறார். அது
உண்மைதான்.மனிதன் கற்பனை ஆற்றல் உடையவன். அந்தக்
கற்பனை ஆற்றல் இல்லாதவன் மனிதன் அல்லன்.கற்பனையாற்றல்
தவறாகப் பயன்படும் போது அது பொய் ஆகிறது.
டாக்டர் மு.வ. அவர்களின் '' உலகப்பேரேடு'' என்ற நூலிலிருந்து.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment