தென்கச்சி பதில்கள்

தென்கச்சி பதில்கள்

கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன வரம் கேட்பீர்கள்?- கோகிலா சா, அய்யம்பாளையம்

வரம் கேட்க வாய்ப்பில்லை! கடவுளைப் பார்த்தவுடனே அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்.

கேள்விகள் தீர்ந்து போனால் என்ன செய்வீர்கள்?-வீர செல்வம், பூம்புகார்

அப்பாடா...! என்று நிம்மதியாக ஒரு பெருமூச்சு விடுவேன்.

மனதிற்கேற்ற வாழ்க்கை அமைவது எப்படி?-திருவண்ணாமலை சாமி

நன்றி;மஞ்சரி - அக்டோபர் 2007
&http://www.dinamalarbiz.com/DEMO11/piraithal_manjari.asp

வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை அமைந்துவிடுகிறது.

நிறைகுடம் தளும்போது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்ல முடியுமா?- எஸ்.மனோன்மணி, சிவலிங்கம், கோவை

ஆயிரம் ரூபாய் நோட்டும் 50 காசு நாணயமும் சந்தித்துக் கொண்டன. ஆயிரம் ரூபாய் துள்ளிக்குதித்தது. நான் கோடீஸ்வரர்களின் கையில் இருக்கிறேன்! ஐம்பது காச நாணயம் அடக்கமாகச் சொன்னது நான் கோவில் உண்டியல்களில் இருக்கிறேன்.

ஒரு குரு எப்படி இருக்க வேண்டும்? சீடன் எப்படி இருக்க வேண்டும்?-புதுவை கிருஷ்ணன்

சின்சஸ் என்று ஒரு குரு இருந்தார். அவர் ஒரு ஜென்மாஸ்டர். அவன் தனது சீடர்களுக்கு நான்கு விதமாக போதிப்பவர். சில சமயம் அவர் தன் சீடர்களைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தன் போதனை பற்றி விளக்கிப் பேசுவார். சில சமயம் அந்த இரண்டைப் பற்றியும் பேசுவார். முடிவில் அவர் எந்தவித அறிவுரைகளையும் கூறாமல் முடித்துவிடுவார். ஏனென்றால் ஓர் உண்மையான சீடனுக்கு எந்த வித அறிவுரையும் தேவையில்லை. காரணம் எல்லா சீடர்களிடமும் புத்தன்மை இருக்கிறது. பார்க்கப்போனால் யாருக்கும் போதனைகூட தேவையில்லை. நண்பரே! ஓஷோவின் இந்த விளக்கத்தில் உங்கள் கேள்விக்கான விடை கிடைக்கிறதா.... பாருங்கள்.

நேர்மையற்றவர்கள் பலர் வசதியாகவும், நேர்மை உள்ளவர்கள் வசதி இல்லாமலும் இருக்கிறார்களே...?-கே,எஸ்.கோவர்த்தனன், வேளச்சேரி

பொதுவாக நேர்மை என்பது வசதியைக் கொடுக்காது. ஆனால் நிம்மதியைக் கொடுக்கும். இந்த உலகத்தில் வசதியாக வாழ்வது முக்கியமில்ø. நிம்மதியாக வாழ்வதுதான் முக்கியம்.

60வது ஆண்டு சுதந்திரதின விழாவுக்கு உங்கள் செய்தி என்ன?-ம.வே.வரதராஜன், சென்னை - 35

முதல் சுதந்திர தினத்துக்கு முதல்நாள் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்ன ஒரு செய்திதான் இன்றைக்கும் நமக்குத் தேவைப்படுகிறஒரு செய்தியாக இருக்கிறது. அவர் சொன்னார்.

நண்பர்களே! இன்று இரவு நமக்குச் சுதந்திரம் கிடைக்கப் போகிறது. நாளை முதல் நாம் செய்கிற தவறுகளுக்கு ஆங்கிலேயர்கள் மீது பழி போட முடியாது.

சிபிசக்கரவர்த்தி பற்றி கொஞ்சம் விளக்கவும்?-ஏரலான், மயிலாப்பூர்

உங்கள் கேள்வியைப் பார்த்தவுடன் அபிதான சிந்தாமணியைப் புரட்டினேன்.

ஆ. சிங்காரவேலு முதலியார் அவர்கள் கொடுத்திருக்கிற விளக்கம் இது. இவன் சூரியகுலத்து அரசனேயாம். இப்பெயர் கொண்ட ஒருவன் சந்திரகுலத்திலும் இருந்திருக்கின்றான். இவன் வனத்தில் இருக்கையில் தேவர் இவனது தவத்தைச் சோதிக்க இந்திரன் வேடனாகவும், அக்னி தேவன் புறாவாகவும், உருவடைந்து அரசன் காண கேவடன் புறவைத் துரத்தி அரசனுக்கு நேராக வரப்புறா அரசனிடம் அபயமடைந்தது. அரசன் வேடனை நோக்கி வேறு இறைச்சி தருகிறேன். இதை ஒழஞ்க என வேடன் உடன்பாரது இதனைத் தராது மறுக்கின. அப்புறாவின் நிறையுள்ள உன்னுடம்பின் இறைச்சி தருக என, அரசன் மகிழ்ந்து அந்தப்படி ஒரு துலையிட்டு அதில் புறாவை நிறுத்தித் தன்னுடலின் இறைச்சி முழுவதுமும் அறத்திட்டன். இடுந்தோறும் புறவு இட்ட தட்டுத் தாழ்ந்தே வர அடம்பில் வேறு மாமிசம் இல்லாமையால் அரசன்தானே துலையில் ஏறத்தேவர் இருவரும் களித்து அரசனுக்குத் தரிசனம்தந்த உடலில் தசை வளரச் செய்து கவர்க்கம் அளித்தனர்.

மக்களின் தலைவலிக்கும், அரசின் தவைலிக்கு என்ன காரணம்?-நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கரூப்பூர்

இன்றைய சூழ்நிலையில், மக்களின் தலைவலிக்கு அரசு காரணமாக இருக்கிறது / அரசன் தலைவலிக்கு மக்கள் காரணமாக இருக்கிறார்கள் / இருதரப்புமே சத்தியமே. என்கிற மரத்தரையைச் சாட்பிட்டால் தலைவலி குணமாகும்.

உலகம் விசித்திரமானதா?-கோ.ராமதாஸன், ஆடுதுறை

இன்றைய நிலைமை அப்படித்தான் தோன்றுகிறது. நாய்தான் தன் வாலை ஆட்ட வேண்டும்! வால் நாயை ஆட்டிக் கொண்டிருக்கிறது.

தலைக்கனம், தன்னம்பிக்கை என்ன வித்தியாசம்?-சி.எஸ்..தமிழ் செல்வன், கோவை

இது என்னால் முடியும் என்று நினைப்டுபது தலைக்கனம்.

மனிதன் வாழ்க்கையில் பூனை மட்டும் எப்படி அபசகுணம் ஆனது?-விக்கிரமாதித்தன் ஜேடர் பாளையம்.

முற்காலத்தில் யாரோ ஒருத்தர் வீட்டை விட்டுப் புறப்படும் போது பூனை ஒன்று குறுக்கே ஓடியிருக்கும். போன காரியம் நடந்திருக்காது. உடனே அதற்கும் பூனைக்கும் முடிச்சுப் போட்டிருக்கும் அவருடைய மனம் இதை அடுத்தவரிடம் சொல்லியிருப்பார். இப்படித்தான் இது போன்ற மூட நம்பிக்தகைகள் முளைவிட ஆரம்பிக்கின்றன.
இப்போது எந்த அளவுக்கு அது வளர்ந்திருக்கிறது தெரியுமா? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் எங்காவது புறப்படும் போது வானொலி பெட்டியில் மியாவ்... மியாவ்... பூனைக்குட்டிடி என்ற சினிமாப் பாட்டு சத்தம் கேட்டால்கூட பயணத்ததை நிறுத்தி விடுவார்.

காதலன் - கணவன் ஒப்பிடுக?- கவிச்சுடர் இளங்கதிரவன், கோவை

காதலன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பான்.

கணவன் கேட்டால் எரிந்து விடுவான்.

உயிரையே கொடுப்பேன் என்பான் காதலன்.

உயிரை வாங்குறியே ? என்பான் கணவன்!

உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும். அதுவே உன்னதமான இல்வாழ்க்கை!

உமர்கய்யாம் பாடல்கள்

>வெய்யிற் கேற்ற நிழலுண்டு
>வீசும் தென்றல் காற்றுண்டு;
>கையிற் கம்பன் கவியுண்டு
>கவசம் நிறைய மதுவுண்டு;
>தெய்வ கீதம் பலவுண்டு
>தெரிந்து பாட நீயுமுண்டு;
>வையம் தனிலிவ் வனமன்றி
>வாழும் சொர்க்கம் வேறுண்டோ?

********************************

>எழுதிச் செல்லும் விதியின் கை
>எழுதி எழுதி மேற்செல்லும்
>தொழுது கெஞ்சி நின்றாலும்
>சூழ்ச்சி பலவும் செய்தாலும்
>வழுவிப் பின்னாய் நீங்கியொரு
>வார்த்தை யேனும் மாற்றிடுமோ,
>அழுத கண்ணீர் ஆறெல்லாம்
>அதிலோர் எழுத்தை அழித்திடுமோ

***********************************

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மொழிபெயர்ப்பு

மத்தாப்பு வெளிச்சம் -தென்கச்சி சுவாமிநாதன்

இருட்டும் நேரம். ஒருவன் ஓடிப்போய் ஒரு விளக்கை ஏற்றிக்கொண்டு வந்தான்.

“என்ன செய்கிறாய்?” — அவர்

“இருட்டை விரட்டிக் கொண்டிருக்கிறேன்” என்றான் அவன். இவர் சிரித்தார்.

“ஏன் சிரிக்கிறீர்கள்?”

“இல்லாத ஒன்றை எப்படி விரட்ட முடியும்?”

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, “என்ன சொல்கிறீர்கள்? இருட்டு என்பது இல்லாத ஒன்றா…?”

“ஆமாம். இருட்டு என்று தனியாக ஒன்றுமில்லை, வெளிச்சம் இல்லாத நிலை தான் அது!

“ஓர் இடத்தில் வெளிச்சம் இருந்தால் வெளிச்சமாக உள்ளது என்கிறோம். அந்த இடத்தில் வெளிச்சம் இல்லை என்றால் இருட்டு என்கிறோம், அவ்வளவு தான். ஆக அந்த இடத்தில் இருப்பதும் இல்லாமல் போவதும் வெளிச்சம் தான்.

“இருட்டு என்று தனியாக ஏதோ ஒன்று ஓடி வந்து அங்கே உட்காருவதில்லை. இருட்டு என்ற ஒன்று ஏற்கனவே இருப்பதாகவும் வெளிச்சத்தை கண்டவுடனே அது எழுந்து ஓடிப் போவதாகவும் நினைத்துக் கொள்கிறோம். வெளிச்சம் இல்லைமை தான் இருட்டு என்பதைப் புரிந்து கொள்!”

கையில் விளக்கை வைத்திருப்பவன் சிந்திக்க ஆரம்பித்தான். இருட்டில் வெளிச்சத்தை வைத்திருக்கிறவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

நம் மனதிற்குள் பயம் என்று சொல்கிறோம் இல்லையா…? அதுகூட அந்த இருட்டு மாதிரி தான். வெளிச்சம் இல்லாமை — இருட்டு — என்கிறோம் அல்லவா? அது மாதிரி அன்பு இல்லாமை தான் பயம்.

அன்பு என்கிற விளக்கை ஏற்றுகிறபோது அங்கே பயம் என்கிற இருட்டு இருப்பதில்லை.

நன்றி' (ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நவம்பர் 2007 இதழ் )
& http://srinig.wordpress.com/2007/11/08/deepavali-2007/

'மன்னிப்பு’ -சிறுகதை (மாப்பஸான்)

பிரெஞ்சு எழுத்தாளரான மாப்பஸான் அவர்களின் 'மன்னிப்பு’
என்கிற சிறுகதையில் மனைவி தவறு செய்த
கணவனை மன்னிக்கிறாள்.


கதையில் ஒரு தம்பதியினர் இடம்
பெறுகின்றனர். மனைவி பெர்த்தி அப்பாவி. அவ்வளவாக
வெளிஉலக வாழ்வு தெரியாதவள். ஆனால் கணவன் ஜார்ஜ்
மீது அளவு கடந்த பிரியமுள்ளவள். திடீரென்று ஒருநாள்
காலை ஒரு மொட்டைக்கடிதம் அவளுக்கு வருகிறது. நகரிலேயே
வசிக்கக் கூடிய இளம்விதவையான ஜூலி என்பவளுடன் ஜார்ஜூக்கு
இருக்கும் கள்ள உறவைப் பிரஸ்தாபிக்கிற கடிதம் அது. படித்ததும்
சுக்குநுாறாகக் கிழித்தெறியும் மனைவி மனக்குமுறலோடு அறைக்குள்
படுத்துக்கிடக்கிறாள். மாலையில் வீடு திரும்பும் கணவனிடம்
செய்தியைச் சொன்னதும் உள்ளூரப் படர்ந்த அதிர்ச்சியைக் காட்டிக்
கொள்ளாமலே அவளுடைய கூச்ச சுபாவத்தின் காரணமாகவே பல
ஆண்டுகளாக தோழியாக உள்ள ஜூலியை அறிமுகப்படுத்தவில்லை
என்று சொல்லிவிட்டு அன்று மாலையே அவளிடம் அழைத்துச்
செல்கிறான். கணவனின் கபடற்ற அன்பை நினைத்து மனம்
பூரிக்கிறாள் பெர்த்தி.எதிர்பாராத விதமாக ஜூலியின் வீட்டு மாடிக்கே வாடகைக்குச்
செல்கின்றனர் தம்பதி. ஜூலியை உயிர்த் தோழியாக நினைத்து
உறவாடுவாடுகிறாள் பெர்த்தி. தோழிகளின் பேச்சு நாள்தோறும்
உல்லாசமானதாக இருக்கும். இரு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள்
காய்ச்சலில் படுத்த படுக்கையாகிறாள் ஜூலி. மருத்துவம் பார்த்த
டாக்டர் பிழைப்பது அரிதென்று சொல்லி விடுகிறார். தோழியைக்
கட்டித் தழுவி அழுகிறாள் பெர்த்தி. அல்லும் பகலும் உண்ணக் கூடச்
செல்லாமல் நோயாளிக்குத் துணையாக நிற்கின்றனர் இருவரும்.


குறிப்பிட்ட நாள் மாலை தன் உடல்நிலை சற்றே தேவலாம் என்றும்
இருவரையும் சாப்பிட்டு வருமாறு சொல்லி அனுப்பி வைக்கிறாள் ஜூலி.
வீட்டுக்கு வந்து சாப்பிட உட்கார்ந்த வேளையில் வேலைக்காரி ஒரு
கடிதத்தைக் கொண்டு வந்து ஜார்ஜிடம் தருகிறாள். கடிதத்தைப் படித்ததும்
அவன் முகம் வெளுக்கிறது. பதற்றத்துடன் ஒருநொடியில் வருவதாகச்
சொல்லி விட்டு வெளியேறுகிறான். அவளை எங்கும் செல்ல வேண்டாம்
என்றும் சொல்லி விட்டுச் செல்கிறான். குறித்த நேரத்தில் அவன்
வராததால் எங்கும் வெகுதுாரம் போயிருக்கிறானோ என்பதைக் கவனிக்க
அவனுடைய அறைக்குச் செல்கிறாள்.வெளியே எங்கே சென்றாலும்
கையுறைகளை அணிந்து செல்லும் பழக்கமுள்ள ஜார்ஜ் கையுறைகளை
அன்று அணியாமல் சென்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுறுகிறாள்.
அதே சமயத்தில் கீழே கசக்கி எறியப்பட்டிருந்த கடிதத் துண்டையும்
பார்க்கிறாள். கடிதத்தை அவசரமாக நீவிச் சரியாக்கிப் படித்துப் பார்த்து
அதிர்ச்சியுறுகிறாள். அது ஜூலி எழுதிய கடிதம்.
ஏ அன்பே, நான் சாகப் போகிறேன். ஒரே ஒரு நொடி, நீங்கள் மட்டும்
தனியாக வாருங்கள். உங்கள் மடியில் தலைவைத்து உயிர்விட
வேண்டும் என்று எழுதப் பட்டிருக்கிறது. பெர்த்தியின் நெஞ்சம்
நடுங்குகிறது. இடைக்காலத்தில் இருவரும் திருட்டுத்தனமாகப்
பார்த்துக் கொண்ட பல பழைய விஷயங்கள் ஞாபகத்தில் எழுந்து
குழப்பியடிக்கின்றன.திரும்பி வந்த கணவனுடன் சகஜமாக அவளால் பேச முடியவில்லை.
ஜூலியும் மரணமுறுகிறாள். பெர்த்தியின் வாய் அதன்பிறகு
ஒரேயடியாக அடைபட்டு விடுகிறது. கண்களால் தன் கணவனை
ஏறிட்டும் பார்ப்பதில்லை. வெறுப்பையும் கோபத்தையும் மறக்க
சதாகாலமும் இறைவனைத் தொழத் தொடங்குகிறாள். ஓராண்டுக்
காலம் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் இருவரிடையே எந்தப் பேச்சும்
இல்லை. அவனை மன்னிக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல்
அவஸ்தைப் படுகிறாள். கடுமையான மனஉளைச்சலுக்குப் பிறகு,
எந்த ஜூலியால் தன் மனஅமைதி கெட்டதோ அதே ஜூலியின்
கல்லறைக்குக் கணவனுடன் சென்று மலர்மாலை வைத்துப் பிரார்த்தனை
செய்த பிறகு இருவரையும் மன்னிப்பதாகச் சொல்கிறாள்.
புது வாழ்க்கையைத் தொடரக் கணவனை அழைக்கிறாள்.பரத்தையர் வீட்டுக்குச் சென்று திரும்பும் கணவன்மார்களைச்
சலித்துக் கொண்டும் வசைபாடியும் மன்னித்து ஏற்றுக் கொள்ளும்
மனைவிமார்களின் மனக்குமுறல்களைச் சங்கப் பாடல்களில்
ஏராளமாகப் பார்க்கலாம்.பெர்த்தியின் மனக்குமுறலைப் படிக்கும்
போது உலகெங்கும் வாழும் பெண்களின் பெ முச்சே இலக்கியமாக
மாறியிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஒருபுறம் துடிப்பும் கோபமும்
மிகுந்த குமுறல். மறுபுறம் அனைத்தும் தணிந்த மன்னிப்பு.
பெண்கள் மட்டுமல்ல, ஒருவிதத்தில் ஆண்களும் இந்த இரண்டு
புள்ளிகளுக்கிடையே மாறிமாறித் தாவிப் பறக்கும் பறவைகளாக
இருக்கிறார்கள்.
___________________________________________________
நன்றி;
பாவண்ணன் Thainnai.com-ல் 21.-12-2002 ல் பதிவிட்ட கட்டுரையின் பகுதி

குறும்பாக்கள்

நன்றி : நெல் காலாண்டிதழ்


சுகமான சுமை
தந்தையின் முதுகில்
உப்பு மூட்டையாய் மழலை.


கருத்த இரவில்
வெளிச்ச நடை
என்னவளின் வருகை.

ச.கோபிநாத் - சேலம்


சாதிப் பெட்டிக்குள்
அடைப்பட்ட தீக்குச்சிகள்
நாங்கள்
நாளை ஒவ்வொன்றாய்
பொறியாவோம்
அதில் சாதி மதங்கள்
கரியாகும்,

சு.சாபர்கான் - காஞ்சிபுரம்


மாணவி கற்பம்
ஆசிரியர் கைது
பாலியல் கல்வி


ஊதியம் உயர்ந்தது
ஆடை குறைப்பிற்காக
கவர்ச்சி நடிகை


திருட்டுப் பயமில்லை
பத்திரமாய் இருக்கிறது
அடகுக் கடையில் நகை.


மாப்பிள்ளை தேடல்
மிகவும் கவனமாக
தங்கத்தின் விலையேற்றம்


கலைமகள்
விலைமகளாய்
கல்வி நிறுவனங்களில்

அறிவொளி க. வெங்கடேசன்


http://nelithazh.blogspot.com/2008/08/blog-post.html

எண்ணால் கூட்டமிடப்பட்ட நீங்கள்...

எண்ணால் கூட்டமிடப்பட்ட நீங்கள்...

உங்கள் எண்ணுக்காக
காத்திருக்கிறீர்கள்

யாருடைய தொடுகைக்காகவோ
உங்கள் எண்ணும்
உங்களை வந்தடைய காத்திருக்கிறது

எண்களின் அடிப்படையில் கணிக்கப்படும்
உங்களின் அகமும் புறமும்
தட்டையாகிவிட்டன முன்னைவிட.

ஒரு எண்ணுக்கும் மற்றொரு எண்ணுக்குமிடையில்
வெளிவரத் தவிக்கும்
மலம்போல ஆகிவிட்டீர்கள்.

கைகால்களை வாகாகக் கொடுத்து
கட்டிப்போட, எண்களுக்கு
எந்த சிரமமும் தருவதில்லை நீங்கள்.

எண்ணை நீங்கள் அணுகும்விதமும்
எண் உங்களை அணுகும் விதமும்
நாய்ப்புணர்ச்சியை ஒத்திருக்கின்றன.

எதற்கும் எச்சரிக்கையாய் இருங்கள்.
காலம், கூட்டிக் கழிக்கும்
கடைசி எண்
நீங்களாகவும் இருக்கலாம்.

மா.காளிதாஸ்
http://vadakkuvaasal.com/article.php?id=51&issue=46&category=6

கவிதைகள் - யாழி

>பொய்களின்
>ஒப்பனை
>கலைகிறபோது
>தெரிகிறது,
>கோரமாய்
>காட்சியளித்த
>உண்மையின்
>அழகியமுகம்

* * *

>சாத்தியங்களுக்கான
>அவகாசங்கள்
>கிடைக்கும் முன்
>மொழிபெயர்த்து
>விடுகிறார்கள்
>யார், யாரோ
>எனது
>கனவுகளை.
___________________________________


>ஆக்கம்' ; யாழி (ப.கிரிதரன்)

>நன்றி; http://vadakkuvaasal.com/article.php?id=51&issue=46&category=6

நீ மட்டும். . .

>காற்றின் வருகையை
>களிப்புடன் தலைசிலுப்பி
>வரவேற்கிறது மரம்...

>இதழ்விரித்துப்
>புன்னகை பகிர்ந்த பூக்கள்
>தங்களை அர்ப்பணிக்கத்
>தலையாட்டி அழைக்கின்றன...

>இடியையும் மின்னலையும் அனுப்பித்
>தனது தலைநீட்டலை
மகிழ்வுடன் அறிவிக்கிறது மழை...

>இலைகளை உதிர்த்த
>கிளைகளின் முதுகில்
>மீண்டும்_
>தளிர்களைத் துளிர்த்துக்
>கொண்டாடுகிறது வசந்தம்...

>எங்கோ உதித்த சங்கீதத்தின் சிறுகீற்று
>எல்லோர் காதுகளுக்கும்
>சுகஒத்தடம் பரிமாறுகிறது...

>ஆடிக்கொண்டே போகும் ஆறு
>ஆனந்தமாகக் குதிக்கிறது
>பள்ளத்தில்... அருவியாக...

>தூறல்களின் சிலிர்ப்பில்
>தன்னிச்சையாய் முளைத்த
>காளான் குடைகளுக்கு அடியில்
>துளிகளை_
>ஆர்வமுடன் பருகுகிறது எறும்பு...
____________________________________

>அனலேந்தி
>நன்றி;http://vadakkuvaasal.com/article.php?id=51&issue=46&category=6
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது