கடல் பயணத்தின் போது கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
முல்லா பயம் ஏதுமில்லாமல் இருப்பதைப் பார்த்து
வியந்த நண்பர் அவரிடம் ''கப்பலில் அமைதியுடன் இருக்க
எப்படி முடிகிறது'' என கேட்டார்.
உடனே முல்லா தன் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து கொல்லப்
போவதாக கூறினார். அவளோ கலகலவென்று சிரித்தாள்.
உனக்கு ஏன் பயம் ஏற்படவில்லை எனக் கேட்ட போது,அதற்கு
அவள் சொன்னாள், ''கத்தி கொல்லும் வல்லமை உடையதுதான்,
ஆனால் அதைப் பிடித்திருக்கும் கை என் அன்புக் கணவருடையது
அல்லவா ?'' என்றாள்.
இதைக் கேட்ட நண்பருக்கு உண்மை புலப்பட்டது. அலைகள்
கோரமானவை. . . ஆனால் ஆட்டி வைப்பது அன்புடைய ஆண்டவன்
அல்லவா ?
(சுகிசிவம் சொற்பொழிவில் கேட்டது.)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment