சிலுவைப் புறா

தேவாலயச் சிலுவையின்

உச்சியில் அமர்ந்திருக்கும்

ஒற்றைப் புறா

அந்த தேவாலயத்தையே

தலை கீழாகச்

சுமந்து கொண்டிருக்கிறது
-----------------------------------


>க.ஜானகிராமன்
நன்றி; ஆனந்த விகடன் 8-07-09

ஏழு அதிசயங்கள் !

வேலூருக்கு என்று ஏழு அதிசயங்கள் உண்டு..
கேள்வி பட்டதுண்டா நீங்கள்?

1. கடவுள் இல்லா கோவில் (சிலை திருடப்பட்டது
ஆனால் மீண்டும் புதிதாக வைக்கவில்லை)

2. தண்ணீரில்லா ஆறு (பாலாறு)

3. அதிகாரமில்லாத போலிஸ் (ஏன் என்று தெரியவில்லை)

4. அழகில்லாத பெண்கள்.

5. வீரமில்லாத ஆண்கள்

6. ராஜா இல்லாத கோட்டை

7. மரமில்லாத மலை (இதனால் தான் மிகுந்த வெப்பம்.
வேலூர் வெய்யிலுக்கு பிரசித்தி)

நன்றி;
- விழியன்

நாலு விஷயம்!

தேர்ந்த ஞானத்துக்கு ஒரே அறிகுறி பலவீனமானவர்களுக்கு
நல்வழி காட்டுவது தான்.

>அரிஸ்டாட்டில்

---------------------------------------------------------

நீங்க தும்மும் போது வாய்/மூக்குல இருந்து பறக்கக் கூடிய
துகளின் வேகம் மணிக்கு 100 மைல்களுக்கும் மேல்.


------------------------------------------------------------

குதிக்க முடியாத ஒரே மிருகம் யானை!


------------------------------------------------------------
குத்து வயித்துக்காரன் தூங்கினாலும்,
குறை வயித்துக்காரன் தூங்க மாட்டான்!

------------------------------------------------------------

பொன்மொழிகள்

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச்
சரிவர செய்வது மேல்.

-ஜெபர்சன்.

------------------------------------------------------

ஒரு மனிதனுக்கு அளிக்கக்கூடிய கடுமையான தண்டனை
அவனால் புரிந்துகொள்ள இயலாத காரியத்தை,
கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான்.

- காந்திஜி

-------------------------------------------------------

எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம்
ஏழையாக இருக்க முடியாது.

-ஹிட்ச்சாக்

--------------------------------------------------------

உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி
கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை
கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்.

-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

----------------------------------------------------------

அமெரிக்கரின் வெற்றி!

அமெரிக்கர்கள் ஏன் வெற்றி பெறுகிறார்கள் தெரியுமா?

AMERICAN என்ற வார்த்தை ICAN என முடிவதால்
அதாவது I CAN என்னால் முடியும் என முடிகிறதே,
அதனால்தான்!

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!

இரவில் தூக்கம் வரவில்லையென்றால் கசகசா
என்று சொல்லப்படும் மருந்து சரக்கை ஒரு கரண்டி
எடுத்து அரைத்து ஒரு டம்ளர் பசும் பாலில்
அரைத்து கரைத்து மாலையில் சாப்பிட்டால் இரவு
நல்ல தூக்கம் வரும்!

---------------------------------------------

ஒரு நாள் உங்களுக்கு தூக்கம் போதாது இருந்தால்
மறுநாள் சற்று அதிகம் தூங்கி உங்கள்
உடல் அதனை ஈடு செய்யும் ஆற்றல் கொண்டது.

ஆனால் கடன் அதிகமானால் கவனஈர்ப்புத் திறன்,
முடிவு எடுக்கும் திறன்,
செயற்படும் திறன் போன்ற பல உடற் செயற்பாடுகள்
பாதிப்புறும்.

பிறந்த பயன்!

இளைஞனே!
ஓடுகின்ற கால்கள்
ஓய்வெடுக்கும் போது
நீ எடுத்துக்கொண்ட பயணம்
முடிந்திருக்க வேண்டும்!

வாழ்ந்த நாட்களை
திரும்பிப் பார்க்கும் போது
உன் பெயரை சிலர்
உச்சரிக்க வேண்டும்!

கோபுரங்களின் அழகை
அஸ்திவாரங்கள் தாங்குவது போல்
நீ பிறந்ததின் பயனை
ஊரறியச் செய்

- யாரோ
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது