என்று தணியும். . .

பாலகன் அழும் குரல் கேட்டு
பால் புட்டியுடன் ஓடி வந்தாள் பார்வதி
பயந்து போனாள். . .?
அங்கே அங்கமெல்லாம் மெலிந்த நிலையில்
அழுது கொண்டிருந்தார்கள்
ஆயிரம் ஞானசம்பந்தர்கள் !

(கவிதை --த.செல்வம்,புதுக்கோட்டை)

2) அகலிகை;
எத்தனை வேகமாய்ப் போனாலும்
எனது திருமண ரயிலை
என்னால் பிடிக்கவே முடிவதில்லை
எல்லா ராகங்களிலும் இசைத்து விட்டேன்
வருகிறவனெல்லாம் வார்த்தையோடு
போய் விடுகிறார்கள்.
வரனாக வரும் போது நரைத்த கிழவன் கூட
இதயத்தைச சிரைத்து விட்டுத்தான் வருகிறான்
இன்றைய இராமர்களுக்கு அகலிகைகளைக்
கல்லாக்கிப் பார்ப்பதில்தான் களிப்பு !

(கவிதை; டாக்டர் ஆர்.கோவி,ஈரோடு.)
நன்றி; சாவி12.9.90

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது