சாபமும் புகழுக்கே !

தேவர்களில் ஒருவரான சங்கு கர்ணர்,பிரும்ம
தேவருக்கு மலர்கள் கொண்டு செல்வார். அவ்வாறு
கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தால்
பிரும்ம தேவரால், ஸ்ரீமந் நாராயணரின் திருவடியை
அர்ச்சனை செய்ய இயலாமல் போய்விட்டது.அதனால்
கோபமுற்று,பூமியில் அரக்கர் குலத்தில் பிறக்க
சாபமிட்டார். சாபவிமோசனம் அடைய,ஸ்ரீஹரி விஷ்ணுவே
காப்பாற்றுவார் என்றும் அருளினார்.

பூவுலகில் அசுரமன்னன் ஹிரண்யகசிபு மனைவி
லீலாவதி கருவுற்றிருந்தாள். நாரதரின் அறிவரையின்படி
ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை கூறி வந்தாள்.
கருவிலிருந்த குழந்தையும் கேட்டது. அக்குழந்தைதான்
பிரஹலாதன்.
வானுலகில் சங்கு கர்ணராக இருந்தவர்தான்
பிரஹலாதனாக வந்தார். இவர்தான் பின்னாளில்,
கலியுகத்தில் வியாகராஜர் என்று அழைக்கப்படும்
ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் ஆவார்.

சங்கு கர்ணராக இல்லாதபோது, இருந்த இரண்டு
அவதாரங்களும் மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தன.

சில சமயங்களில் வசவுகளும் சாபங்களும்
நன்மையைத் தரும் !

(சிந்திக்க வைக்கும் 35 கதைகள் என்ற நாலிலிருந்து)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது