ராமராஜ்யம் என்பது ஒரு லட்சிய அரசாங்கம்.அந்த
ராமராஜ்யத்திலும் நகைப்புக்குரிய ஒரு விநோதமான சட்டம்
இயற்றப்பட்ட்டிருக்கிறது.
ஸ்ரீராமர் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சியில் நர்த்தகி
ஏதோ ஒரு பாவம் காட்டியது நகைப்புக்கிடமாக இருந்தது.
ஜனங்கள் 'கொல்' என்று சிரித்துவிட்டார்கள். அந்த நகையை
மிகப்பெரும் ஒழுங்கீனமாகவும் கீழ்த்தரமான அதர்மமாகவும்,
கருதி யாருமே அயோத்தியில் சிரிக்க கூடாது என்று சட்டம்
கொண்டு வந்தார் ஸ்ரீராமர்.
நகையின் நகைச்சுவை உணர்வு செத்து கொண்டே வந்தது.
ஸ்ரீராமருக்கு இதனால் மிகப்பெரிய அபவாதமும் வந்தது.
அதனால் பிரம்மா ஒரு சிறுவனின் வடிவத்தோடு ஊர்ப்புறத்து
எல்லையில் ஒரு அரச மரத்தின் மீது ஒளிந்து கொண்டார்.
அங்கு போவோர் வருவோரை எல்லாம் சிரிக்க வைக்க
மேலிருந்தபடியே சேஷ்டைகள் செய்வார். அப்படி ஜனங்கள்
கூட்டம் கூட்டமாக அரசமரம் அணுகி நகை துய்த்து மீண்டார்கள்.
ஒரு முறை அப்படி அரசமரம் போய்த்திரும்பிய ஒருவன் அரச
மரத்துச் சிறுவனின் சேஷ்டைகளை நினைத்தபடி அரச சபையில்
சிரித்துவிட்டான். பின் சேவகர்கள் கண்டிக்க முழு உண்மை
வெளிவந்தது. தன் சட்டத்தின் அபத்த தன்மையை உணர்ந்து
ஸ்ரீராமர் அரச மரத்தை சந்தோஷத்தின் சின்னமாக்கினார்.
இந்த கதை 'விசுராஷ்வதா' என்கிற தலபுராணத்தில்
வருகிறது. சர்ச்சைக்குரிய கிண்டலுக்கரிய சட்டங்கள் எல்லாக்
காலங்களிலும் வந்திருக்கின்றன என்பதும் தெரிகிறது.
நன்றி; மாலதி (பெண்ணே நீ - மாத இதழ்)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment