பழி !
தோணி என்றுதான் எனக்குப் பெயர்
நீங்கள் கடத்தினீர்கள், நான் களங்கமானேன்
கைது செய்து என்னையும் குற்றஞ் சுமத்தி
கரையில் போட்டார்கள்.
நான் கள்ளத்தோணியாம் !
மூங்கில்
உதட்டோடு உறவாடியபோது
குழல் ஓசையானாய்
இறந்த உடலோடு உறவாடியபோது
பாடையானாய் !
தவிப்பு
சந்திரனில் கால் வைத்துக்
குடியேற நினைக்கின்றார் !
நான் செவ்வாயில் இதழ் வைத்துக்
குடியிருக்கத் தவிக்கின்றேன் !
நன்றி; கவிஞர் தரணி (தண்ணீரின் தாகம்)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment