நிலாச்சோறு
தயவு செய்து சொல்கிறேன்
`அந்தநிலாவுல ஒரு ஆயா. . .என்று
மட்டும் ஆரம்பித்துவிடாதே அம்மா.
எடுத்ததும் எதற்கு என் மூளைக்குள்
மூடத்தனம் திணிக்கிறாய்?
முதல்கோணல் முற்றிலும் கோணல்.
பிரபஞ்சம் பால்வழிப்பாதை
சூரியன்கோள்கள் நிலாநட்சத்திரம்...
அறிவியல் தெரிந்துகொள்
வள்ளுவன் பாரதி பாவேந்தன்
கம்பன் இளங்கோ...
தமிழியல் புரிந்துகொள்.
சமையலறையில் பூண்டு மிளகோடு
சில புத்தகங்களும் அடுக்கிவை.
படி.நிரம்ப படி
தெளி.தெளிந்தபின்
எனக்கு ஊட்டு.
அம்மா...
பசிக்கிறது எனக்கு
வயிற்றுப்பசியல்ல,அறிவுப்பசி
ஊட்டு. . .ஊட்டு
நிலவின் உயரத்திற்கு உன்புகழும்
அதன் ஒளி போல்
உலகெங்கும் என்புகழும்
நிச்சயம் பரவும்.
புதுவை பிரபா (கவிதைகள்)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment