1) குளம்
முகம் பார்க்கும் நிலா
குளிக்காமல் திரும்பினேன்.
2) தண்ணீர் தெளிக்க வந்தேன்
தாமதிக்கச் செய்தன
வரிசையாய் எறும்புகள்.
3)காய்ந்த சருகுகளில்
சங்கீதம்
பழமொழிகள்.
4)சாய்வதற்கு மனசில்லை
நாற்காலி உரையில்
சிரிக்கும் குழந்தை.
5)நேற்று பனைமரம்
இன்று பாலம்
பாவம் மனிதர்கள்.
6)மழை வலுத்த பாதையில்
ஆறுதலாய் இருந்தது
குடையில் கேட்ட பேச்சு.
7)மண் விளக்குகளை அணையுங்கள்
மொனமாய் இரசிக்கலாம்
நிலா நிழல்.
8)தலை முறை கோபம்
அடிவிழ அடிவிழ
அதிரும் பறை.
நன்றி; கவிஞர் மித்ரா (குடையில் கேட்ட பேச்சு )
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment