''எண்ண விரிவுகளை எழுத்துச் சுருக்கத்தில் கொண்டு
வருவது கவிதை.கவிதை ஓர் சுருக்க வாகனம்.அதிலும்
ஹைக்கூ வாமனம்'' என்கிறார் ஓவியக் கவிஞர் மலர்மன்னன் தனது அணிந்துரையில் (சஞ்சீவி
மோகனின் ' கிராமத்துக் காற்று).
இந்த ஹைக்கூ தொகுப்பிலிருந்து சில ஹைக்கூ
கவிதைகள் ;
கடவுளிடம் கூட நிறைய ஆயுதங்கள்
மனிதன் மட்டும்
எப்படி அமைதியாய் ?
இறந்த பின்னும்
உழைக்கிறது செருப்பாய்
மாடு.
அதிக பலம் ஆபத்து
சூறாவளியில் சாய்ந்த மரம்
அசையாமல் புல்.
காப்புரிமை பற்றிக் கவலையில்லை
கிளி தின்னனும்
வேப்பம் பழம்.
நன்றி ஊர்வலம் நடத்தும்
எறும்புகள்
அம்மா போட்ட மாக்கோலம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment