1) கூரையைப் பிய்த்துக்
கொட்டியது நிலா
மரத்தடி வீடு.
2) ஐந்து முறை இறந்தாள்
பாட்டி எனது
பள்ளி விடுப்புக்காக.
3) கோபமாய்
இருக்கிறாள் என் மனைவி
உறைக்கும் குழம்பு.
4)பாலை வனத்தில் பரிசோதனை
பக்கத்து நாடுகளில் பதற்றம்
அணுவின்றி !
5) என் தோலை உரித்து விட்டு அவள் அழுது கொண்டிருந்தாள்
வெங்காயம்.
6) வாகனத்தில் இருவர்
வழியில் பூசணி
முடிந்தது எமன் பணி !
7) ஊரில் இவர்தான்
பிரபல சோதிடர்
வாழா வெட்டியாய் மகள் !
8)உடைக் குறைப்பு
ஓ இது
இலையுதிர்காலம் !
9)சேரிக்கு பூணூல் போட்ட
புதுச்சேரிக் கவிஞன்
புரட்சி பாரதி !
10) மரணத்தை தழுவிய மீன்
மறுபடியும் நீந்தியது
கொதிக்கும் குழம்பு.
நன்றி; கவிஞர் கவிமுகில் ( சின்ன உளிகள் )
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment