துளிக்கடல்- இசைஞானி இளையராஜா

விரிவதெல்லாம் வானமில்லை
கற்பிப்பதெல்லாம் கல்வியுமில்லை !
நதி கடலாக முடியாது, கடலில் கலக்கலாம் !
உயிர்கள் இறைவனாக முடியாது
அவனோடு கலக்கலாம் !

என்னால் நான் கொண்ட துயரத்தை
நின்னாலன்றித் தீர்க்க
என்னால் ஆகுமோ ?

சூரியனுக்கு இருளைத் தெரியாது
அறிவுக்கு அறியாமையைத் தெரியாது
உன் மனத்தால் ஏற்பட்ட தளைகளை விட
வேறெந்த தளைகளால்
உன்னைக் கட்ட முடியும் ?

தூக்கம் என்னவென்று தெரியாது
ஏன் தூங்க வேண்டும் ?
விழிப்பு என்னெவென்று தெரியாது
ஏன் விழித்திருக்க வேண்டும் ?
பிறப்பு என்னவென்று தெரியாது
ஏன் இறக்க வேண்டும் ?

இருக்கும்இடத்தை விட்டு
அங்கு இங்கு நகராமல்
காலத்தின் பின்னே செல்ல வேண்டுமா ?
இசையைக்கேள் !

மனிதன் விடுதலை பெற வேண்டியது
தன்னிடமிருந்துதான் !
எடுத்தது பிறப்பில்லை
காத்திருக்கும் இறப்பு !
உன் விளக்கத்தை உன் விளக்கமே
உனக்கு உணர்த்துகிறது !

பாதையானாய் பயணமானாய்
புறப்பட்ட இடமானாய்
அடைகின்ற ஊரானாய் !
MARS -க்கு போகிறாயா ? போ !
எந்த உலகம் போனாலும்
உன்னைத் தொடர்வது மரணம் மட்டுமே !

தலைக்கு மேலே விமானம்
காலின் கீழே மயானம் !
அறிந்ததெல்லாம்
அறியாமையின் முயற்சி
அறியாததெல்லாம்
அறிவிக்கு விளக்கம் !
கல்வி மனிதனிடம் இல்லை
எங்கும் பரந்து கிடக்கிறது !

நன்றி ;இசைஞானி இளையராஜா
(முல்லைச் சரம்-மே 2008)








0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது