காதலித்துப் பார்
தலையணை நனைப்பாய்
காத்திருந்தால் நிமிடங்கள் வருஷங்கள் என்பாய்
வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷங்கள் என்பாய்
இருதயம் அடிக்கடி இடம் மாறித் துடிக்கும்
நிசப்த அலை வரிசைகளில்
உன் குரல் மட்டும் ஒலி பரப்பாகும்
காதலித்துப்பார் . . .
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
உருண்டை ஒன்று உருளக்காண்பாய். . .
உதடுகள் சஹாரா காடாகும் !
தாகங்கள் சமுத்திரமாகும் !
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா ?
வாழ்ந்து கொண்டே சாகவும்
செத்துக்கொண்டே வாழவும் முடியுமா ?
காதலித்துப் பார் !
அபாய வளைவு -நாவலில் விமலா ரமணி.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment