பேரம்

முழம் மூன்று ரூபாய் என்று
தெளிவாகச் சொன்னாள் அவள்
இரண்டரை ரூபாய் வீதம் இரண்டு முழம் கொடு
தெள்ளத் தெளிவாகச் சொன்னேன் நான்
மூன்று நிமிடங்களுக்கும் மேலாக நீண்டுகொண்டு போனது
முழம் மூன்று ரூபாய்க்கான அவளது நியாயங்களும்
இரண்டரை ரூபாய்க்கான எனது விளக்கங்களும்
இறுதியாக ஐந்தரை ரூபாய்க்கு இரண்டு முழம் பூவை
சுருட்டிக் கொடுத்து விட்டு
இரண்டடிக்கு அப்பால் இயல்பாகத் துப்பினாள்
வெற்றிலை பாக்கு எச்சில்.

ஆயினும் சந்தேகமாகத்தானிருந்தது
ஷோரூம்காரன் சொன்ன விலைக்கு நான்
செருப்பு வாங்கி அணிந்ததை பார்த்திருப்பாளோ
அந்த பூக்காரி.

ஜெயபாஸ்கரன்

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது