இராமகிருஷ்ணர் கதைகளில் ஒன்று
பகவான் இராமகிருஷ்ணர் தன் சீடர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்."நீங்கள் ஒரு ஈயாக மாறியுள்ளீர்கள். அப்போது உங்கள் எதிரே அமுதம் நிறைந்த ஒரு கிண்ணம் இருக்கிறது. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?"சுவாமி விவேகானந்தர் எழுந்து தெளிவாக "நான் கிண்ணத்தின் விளிம்பில் உட்கார்ந்து கவனமாக அமுதத்தை பருகுவேன். அவசரப்பட்டு கிண்ணத்தில் உள்ள அமுதத்தில் விழுந்து உயிரை விடமாட்டேன்!" என்றார். சிரித்த குரு, "அமுதத்தை உண்பவர்களுக்கு மரணமே இல்லை. அப்படி இருக்க விளிம்பில் உட்கார்ந்தால் என்ன? அமுதத்திலேயே விழுந்தால் என்ன?!" என்றார்.வாழ்வு ஒரு அமிர்த குளம். உங்களின் சிறிய ஆசைகள் குளத்தின் விளிம்பில் மட்டுமே உட்கார வைக்கும். ஆசைகளைக் கடந்து வாழ்வில் குதித்தால் அல்லல் பட மாட்டீர்கள். அழிந்து போக மாட்டீர்கள். மாறாக ஆனந்தப்படுவீர்கள் என்ற உயரிய தத்துவத்தை மிக எளிமையாக தன்னுடைய சீடர்களுக்கு விளக்கினார் இராமகிருஷ்ணர்.
Labels:
ஆன்மீகம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment