1) கோழியும் சேவலும்
குப்பையைக் கிளறும்
விடியற் காலையில்
கண் மூடிக் கிடக்கும்
ஊர் நாய் ஒரு மூலையில்
இரவெல்லாம் குரைத்த அசதியில் !
2) கும்பிட்டுப் போனான்
குமரன் தீமூட்டி,
மல்லிசேரி பீடியை
எடுத்துப் பற்ற வைத்தான்
மயானத் தோட்டி
எரியும் அப்பா பிணத்தில்!
3) பழமை புதுமை
இரண்டுக்கும் நாங்கள் பாலம்
எலி வாகனம்
ஹெலிகாப்டர் வாகனம்
இரண்டையும் கொண்டாடும்
எங்கள் காலம்!
நன்றி ; மீரா.(குக்கூ-கவிதை தொகுப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment