தந்தை சொன்ன வேடிக்கை கதை
இடையன் ஒருவன் பாலில் நீரைக் கலந்து விடுகிறான்
என்ற சந்தேகத்தினால்,அவன் கறக்கும் போது கவனிப்பதற்கு ஒரு
ஆளை நிறுத்தினார்களாம், ஒரு பணக்காரர் வீட்டில்.
அந்த ஆள் தன் காரியத்தை சரியாக செய்கிறானா
என்பதைக் கவனிக்க அவனுக்கு காவலாக வேறு ஒரு ஆளைப்
போட்டார்களாம். இப்படியே கண்காணிப்புக்கு ஆட்கள் அதிகமாக
அதிகமாக பாலின் நிறமும் வரவரக் குறைந்து கொண்டே வந்து
பால் வெளுப்பே போய்த் தண்ணீரீன் பளிங்குத் தெளிவு வந்து
விட்டதாம். கடைசியில் இவ்வாறு பால் நீராக மாறியதற்கு
காரணம் கேட்ட போது அந்த இடையன், '' இப்படிக் கண்காணிப்பாளரை
அதிகரித்துக் கொண்டே போனால், ஏன் இந்த தெள்ளிய நீரீலும்
நத்தை,மீன்,தவளை எல்லாம் கூடத் தோன்றிவிடுமே '' என்றானாம்.
நன்றி; ரவீந்திரர் கதைத்திரட்டு (சாகித்ய அகாதெமி வெளியீடு)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment