தமிழில் புதிர்கள்

1)சாம்பார் மணப்பதேன்
போர்வீரன் சிறப்பதேன் ?
விடை; பெருங்காயத்தால் !

2)என் வயிற்றுக்குள்ளிருக்கும்
எண்ணற்ற குழந்தைகள்
பிரகாசமாய் பிறந்து
பிறந்தவுடனே இறப்பார்கள். நான் யார் ?
விடை; தீப்பெட்டி.

3)அவனிதனில் ஓர் அற்புத தருவுண்டு
அதற்கு ஈராறு கிளைகளுண்டு
சீராரும் கிளைக்கு சிறுகிளை ஏழுண்டு
கிளைக்குப் பத்துப் பத்துப் பத்துக் கிளையுமுண்டு
நீல இலை பாதி வெண்மை இலை பாதி,
ஆக இலை ஒன்றாக- அது என்ன ?
விடை; ஆண்டு,மாதம்,வாரம்,நாள்,இரவு,பகல் !

4)உருண்ட வடிவமாயிருக்கும் உலகமல்ல
உடம்பெல்லாம் உரோமம் உணடு குரங்குமல்ல
உச்சிக் குடிமி உண்டு அந்தணனுமல்ல
மூன்று கண்ணுமுண்டு சிவனேயல்ல
உடைத்தால் வெளுத்து இருக்கும்
ஒரு குளம் ஜலம் தேங்கியிருக்கும்- அது என்ன ?
விடை; தேங்காய் !

(தமிழில் விடுகதை என்ற நாலிலுருந்து)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது