பாவேந்தர் பாரதிதாசன்

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகளில்
எனக்குப் பிடித்த சில வரிகள்;
1) தணல் குளிரும்
இருள் ஒளியாம்
தமிழர்கள் ஒன்று
சேர்ந்தால்.

2) ஒருவன் புகழ்வான்
ஒருவன் இகழ்வான்
இருவருக்கும் அப்பால் இரு.

3) கண்ணின் கடைப்பார்வை
காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு
மாமலையும் ஓர் கடுகாம்.

4) காண்பதெல்லாம்
தொழிலாளி செய்தான்-அவன்
காணத்தகுந்தது வறுமையாம்
பூணத்தகுந்தது பொறுமையாம் !

5) துன்பம் பிறர்க்கென்றும்- நல்
இன்பம் தனக்கெனும்
துட்ட மனோபாவம்
அன்பினை மாய்க்கும்-புவி
ஆக்கம்தனைக் கெடுக்கும் !

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது