மன எறும்பு
இனிப்பான உன்
நினைவுகளைத் தேடியே எறும்பாய்
இயங்கும் என் மனம்.
நம் சந்திப்புகளில் சிந்திடும்
சந்தோஷப்பருக்கைகளை
பத்திரப்படுத்தி
வைத்துக்கொள்கிறது.
உனை காண முடியாத சில
வரண்ட நாட்களில்
பட்டினி கிடக்காமல்
இருப்பதற்காய் !
குழப்பம்
அன்பே
அமாவாசை இரவில்
மொட்டை மாடிக்கு
போகாதே !
பக்கத்து வீட்டுக்காரர்கள்
பொர்ணமி என்று
குழம்பி விடப் போகிறார்கள்.
நன்றி; கவிதைகள் (புதுவை பிரபா }
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment