மரணம்- கவிதை

கிராமத்தில் பிறக்கும்
பெண் குழந்தைகளை
கள்ளிப்பால் ஊற்றி
கதையை முடிப்பது
எங்களூர் மருத்துவச்சி
நல்லம்மாலின் வேலை

வயதாகி நாடி தளர்ந்து
இப்பவோ எப்பவோ என
இழுத்துக்கொண்டிருந்தது
நல்லம்மாவின் உயிர்

கள்ளிப்பாலுக்கு தப்பிப் பிறந்த
யாரோ ஒருத்தி சொன்னாள்
''நாலு நெல்லுமணியை வாயில் போட்டு
சங்கில் பாலை ஊத்தங்கடி !

நன்றி; மூர்த்தி வலைதளம் ( http://mmorthy.blogspot.com )

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது