வெட்டவெளி வார்த்தைகள்- கன்னட வீரசைவ
வசன கவிதைகள்(தமிழில்) சாகித்ய அகாடமி
வெளீயீடு. . .
1) வேட்டைக்காரன் முயல் கொண்டு வந்தால்
தம்பிடிக்கு வாங்குவார்கள் ஐயா !
நாடாள்பவனின் பிணமென்றாலும் துண்டு
பாக்குக்கு வங்குவாரில்லை பாரய்யா !
முயலைவிடக் கஷ்டமானது மனித வாழ்க்கை
உறுதியாய் நம்புக நம் கூடலசங்கம தேவனை.
2) கள்ளனும் அஞ்சி காட்டுக்குள் புகுந்தால்
புலி தின்னாமல் விடுமா ?
புலிக்கு அஞ்சிப் புற்றுக்குள் நுழைந்தால்
பாம்பு கொத்தாமல் விடுமா ?
மரணத்துக்கஞ்சிப் பக்தனானால் கர்மம்
தீராமல் விடுமா ?
இவ்வாறு, சாவின் வாய்க்குக் கவளமாகும்
வேடதாரிகளை என்னவென்பேன் குஹேஸ்வரா !
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment