அத்தனையும் இருக்கின்றன அப்படியப்படியே
நான் வளர்ந்து நிற்கிறேன்
காலத்தின் கடனாளியாய் !
சிறு வயதின் விளையாட்டு நம்பிக்கைகள்
வேரடி நீராய்க் கசிய
நினைவின் கிளையில் பால்யம் பூக்கிறது !
மாடு முட்டும் என வெற்றிலை தவிர்த்தது
மழைக் கோழிகளுக்குத் துவட்டி விட்டது
முதல் பல் விழுகையில் முற்றத்துக் கூரையை
சொர்க்கமாக்கி சாணம் பொதிந்து எறிந்தது
புளிய மரத்து ஆந்தை
குலசாமி குரலாய் தூங்கச் சொன்னது
நினைவுகள் நுரைக்கும் கடைசி நிமிடந்தோறும்
கழனிக்கு எனை வாங்கியதாய்
அப்பா சொன்ன பொய் மட்டும்
புன்னகைக்க வைத்து விடுகிறது !
சு.தங்கலீலா (ஆனந்த விகடன் 20-2008)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment