உழைப்புதான் கவிதை !

உழவனின் மகன் கேட்டான்
அப்பா,கவிதை என்றால் என்ன ?
விதைத்து அறுப்பது என்றான் உழவன்.

தையல்காரனின் மகன் கேட்டான்
அப்பா,கவிதை என்றால் என்ன?
கிழியாத வெதுவெதுப்பான ஆடைகளைத்
தயாரிப்பது என்றான் தையல்காரன்.

தளபதியின் மகன் கேட்டான்
அப்பா கவிதை என்றால் என்ன ?
இராவணுத்தை வழி நடத்தி செல்வது
என்றான் தளபதி.

கவிஞனின் மகன் கேட்டான்
அப்பா,கவிதை என்றால் என்ன ?
என்குத் தெரியாது என்றான் கவிஞன்
ஆனால் கவிதைகளை எழுதுவது
கவிதை ஆகாது மகனே !

இது ஒரு நாட்டுப் பாடல்.கிரேக்கத்தைச் சேர்ந்த
'கோஸ்டிஸ் பாப்பகோங்லோஸ்' என்ற கவிஞர்
எழுதியது.''உழைப்புதான் கவிதை, உழைப்பின்
கடமைதான் கவிதை என இக்கவிஞர் சிந்திக்கிறார்.
(முனைவர் மு.வளர்மதியின் ''நானும் என் கவிதையும்''
என்ற நூலிலிருந்து)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது