முரண்-கவிதை

முரண்

புத்தர் ஏசு முகமது
பகத்சிங் பாரதி என்று
சுயநலமறுத்துப் பொது வாழ்வில் உழைத்த
மறைந்தோர் பற்றிக் கைதட்டி
வாய் பிளக்கும் என் சுற்றம்
என்னில் அவர்கள்
எங்கோ தென்படும்போது
குற்றம் புரிவதாய் அழுது அரற்றும் !

எழுதியவர்; நாசர் (குமுதம் 27.10.95 இதழ்)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது