தேள் ஒன்று கங்கையில் மிதந்து வந்தது. அது
உயிரை விட்டு விடுமே என பதைத்த துறவி
மெல்ல அதை எடுத்துக் கரையில் விட்டார். மறுகணம்
அது அவரைக் கொட்டி விட்டு மீண்டும் நீரில் விழுந்து
விட்டது.
மறுபடியும் அதை எடுத்துக் கரையில் விட்டார்.
மறுபடியும அது அவரைக் கொட்டி விட்டு நீரில்
விழுந்தது. இப்படியே பல முறை நடந்தது.
அதைப்பார்த்த ஒருவர் துறவியிடம்,'தேளை ஏன்
காப்பாற்றுகிறீங்க ? தேள் கொட்டுகிறதே வலிக்க
வில்லயா' என்று கேட்டார்.
கொட்டுவது தேளின் இயல்பு. உயிரைக் காப்பாற்றுவது
என் இயல்பு. உயிர் போகும் தருணத்தில் கூட தேள்
தன் இயல்பை விடவில்லை. வெறும் கொட்டு வலிக்கு
பயந்து நான் ஏன் என் இயல்பை விடவேண்டும் ? என்று
கேட்டார் துறவி.
நல்லது செய்வோம் என்று நினைத்தால் பிரதிபலனை
எதிர்பாராமலும்,வேதனைகளை தாங்கிக் கொண்டும்
தொடர்ந்து நல்லது செய்து கொண்டே இருக்க வேண்டும்.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன கதை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment