படித்ததில் பிடித்தது
மத்யமர்
சாணி தோய்ந்த வாலைச்சுழற்றியபடியே
நடக்கும் எருமையைக் கடக்கும்பொழுதும். . .
பிரதோஷ சிவனை பக்தியோடு
பிரார்த்தித்து விட்டு வரும்போது
ஒயின்ஷாப்பிலிருந்து குழறலோடு
நெருப்பு மொழி கேட்கும் போதும். . .
ஐ.பி.எப்..வாங்கி அடித்த வெள்ளையில்
வயிறெரிய கலர் கலராய் சின்னம்
வரைந்த வேட்பாளர்
புளிச்ச நாற்றத்தோடு
வீடேறி வோட்டு கேட்ட போதும். . .
பக்கத்து போர்ஷனில் புதுப்பெண் அடிபட்டு
ராத்திரி முழுதும் முனகிய
அழுதகுரல் கேட்டபோதும் . . .
ஒதுங்கிப் போயே பழகுவிட்டது !
(ராஜன் ஸ்ரீநிவாஸ்)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment