ஞானச்சரம்

ஸ்ரீகுரு சுராஜனந்தா அருளியது;

1) அன்புக்குப் பணியாத ஆண்டவனில்லை
ஆசைக்குப் பணியாத மனுஷனுமில்லை.

2) சொல்லிட்டு செய்யறது தியாகமில்லை
செஞ்சிட்டு சொல்றது தர்மமில்லை.

3) வேர் வெளியே தெரிஞ்சா மரத்துக்கு பலமில்லை
மானம் வெளியே தெரிஞ்சா குலத்துக்கு பலமில்லை.

4) வம்பும் தும்பும் வாயாலே வரும்
வரவும் செலவும் தொழிலிலே வரும்
இன்பமும் துன்பமும் வாழ்விலே வரும்
இரக்கமும் பக்தியும் அன்பிலே வரும்.

5) ஆறு திரும்பிட்டா அணைக்கு மதிப்பில்லை
செத்தது திரும்பிட்டா விதிக்கு மதிப்பில்லை.





0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது