கவிதைகள்

உயிர்ப்பு ;
ஒன்பது நாளுக்குள் உன் வீட்டில்
உசிரொன்று போகுமின்னு
ஜக்கம்மா சொல்றா . . .
குடுகுடுப்பை சத்தத்தில்
கை விடுகிறேன்
தற்கொலை முடிவை (கே.சதாசிவம்)

எங்கும் எதிலும் ;
கள்ளச்சாராயம் காய்ச்சிய பணத்திலும்
உடலை விலைபேசி விற்றுவந்த பணத்திலும்
ஏழைத்தாலியின் அடகுப்பணத்திலும்
ஈட்டிக்காரனின் வட்டிப்பணத்திலும்
அதே புன்னகையுடன் காந்திபடம் ! (டெல்லி.எஸ்.ராமஸ்வாமி)

இடைவெளி பாலங்கள் ;
நாற்சந்தி நிறுத்தங்கள்
மேல் பாலங்களில் மறைந்தன
போக்குவரத்து லேசானது
செய்தித்தாள் விற்கும் சிறுவன்
சில்லறை சேகரிக்கும் சிறுமி
வாழ்க்கை கனமானது. (எம்.ஏ.அப்துல் கறீம்)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது