கவிதை
முற்றத்தில் பூக்காத கோலம்
முன் அறையில் கேட்காத பாட்டு
கொல்லையில் மணக்காத துளசி
துவைக்கல்லில் அமராத காகம்
தெருநடையில் சிணுங்காத கொலுசு
மாடத்தில் ஒளிராத தீபம்
எல்லாம் அவளின்றி
என்னோடு
நன்றி; கொளரிசங்கர் ... குங்குமம்(1.7.91)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment