பேசாத வெண்ணிலவு அழகுதான்
பேசாத வண்ணமயில் அழகுதான்
பேசாத பாலைவனம் அழகுதான்
பேசாத காதல்சிலை அழகுதான்
ஆழ்கடலின் மெளனம்கூட அழகுதான்
அசையாத மலையின் மெளனம் அழகுதான்
வான்ஓடும் மேக மெளனம் அழகுதான்
வைகறைப்பொழுதின மெளனம் அழகுதான்
இனிக்கும் தேனை மலர்கள் பேசாது
எடுத்துக் கோர்த்த முத்துமிவை பேசாது
பனித்துளியை மறைக்கும் கதிர் பேசாது
பாச நெஞ்சம் அழும்போது பேசாது
(தினமணியின் படித்தது )
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment