அடி,மிதி,உதை
அஞ்சமாட்டேன்.
போதையில் நீ இருக்கையில்
ரசத்தில் துளி விஷம்
சேர்த்துவிடவோ,
ரயிலேறி நீ தொட முடியா தூரம்
போய்விடவோ.
ஆனால்,
நீயெனக்குச் செய்யும்
சித்ரவதைகள்
உதவியாயிருக்கும்,
என்க்கும் என் பிள்ளைக்கும்
திரும்ப நீ தேவையென்ற உணர்வு
தோன்றவிடாமலிருக்க.
கவிதை; பாரதிப்பிரியா
நன்றி; ஆனந்த விகடன் (14-4-02 )
தேவதை
இளைஞன் ஒருவன் சாலை யில் நடந்து சென்று கொண்டு இருந்தான். அப்போது திடீரென நில் என்ற குரல் கேட்டது. நீ இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் உன் தலையில் ஒரு கல் விழும் என்று எச்சரித்தது.
.
திகைத்துப்போய் இளைஞன் நிற்க, அவன் முன்பாக ஒரு கல் வந்து விழுந்தது. சிறிது தூரம் சென்ற பின்னர் மீண்டும் அதே குரல் நில் இல்லாவிட்டால், வேகமாக வரும் கார் உன் மீது மோதிவிடும் என்று எச்சரித்தது.உடனே அவன் நின்று விட்டான். அப்போது ஒரு கார் வேகமாக அவனைக் கடந்து சென்றது.
இதைக்கண்டு ஆச்சர்யமடைந்த இளைஞன், குரல் கொடுப்பது யார் என்று வினவினான். உடனே அந்த குரல் நான் உன்னை பாதுகாக்கும் தேவதை என்று தெரிவித்தது. இதைக்கேட்ட அந்த வாலிபன், தேவதையே எனக்கு திருமணம் நடைபெற்றபோது, நீ எங்கே சென்றிருந்தாய்? என்றான்.

Labels:
ஜோக்ஸ்
வீட்டோடு இருந்து வயலினை முழு மூச்சாக கற்று வருகிறாராம் பாவனா. ஒரு தமிழ்ப்படத்தில் வயலின் கலைஞராக வருகிறார் பாவனா. இதற்காகத்தான் வீட்டோடு இருந்து வயலின் கற்று வருகிறாராம் பாவனா
பாவனா இப்போது தமிழைத் தவிர தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆகி விட்டார்.
ஜூன் 6 ம் தேதி பிறந்த நாள் கொண்டாடுகிறார் . இவர் மேலும் வளர வாழ்த்துவோம்.
பாவனா இப்போது தமிழைத் தவிர தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆகி விட்டார்.
ஜூன் 6 ம் தேதி பிறந்த நாள் கொண்டாடுகிறார் . இவர் மேலும் வளர வாழ்த்துவோம்.
Labels:
சினிமா
உதிரும் இலை
1) இழந்து விட்டதன் மீதுதான்
ஆசை அதிகரிக்கிறது
எப்போதும்
நேற்று அப்பா
இன்று நீ.
2) அழுது விடுங்கள்
அவமதித்தர்களை
துரோகமிழைத்தவர்களை
ரணப்படுத்தியவர்களை
பிறகு எப்போதும் போல
உங்கள் குழந்தை மனதுடன்
உலா வாருங்கள்.
3) கத்துதல்
முட்டுதல்
உழுதல்
இனப்பெருக்கம் செய்தல்
இப்படி அனைத்தம்சமும் உண்டு
ஆனாலும்
ஏனோ
கறுப்பு மாடுகள்
எளிதில் விலை போவதில்லை.
நன்றி; யாழினி முனுசாமி ( உதிரும் இலை )
ஆசை அதிகரிக்கிறது
எப்போதும்
நேற்று அப்பா
இன்று நீ.
2) அழுது விடுங்கள்
அவமதித்தர்களை
துரோகமிழைத்தவர்களை
ரணப்படுத்தியவர்களை
பிறகு எப்போதும் போல
உங்கள் குழந்தை மனதுடன்
உலா வாருங்கள்.
3) கத்துதல்
முட்டுதல்
உழுதல்
இனப்பெருக்கம் செய்தல்
இப்படி அனைத்தம்சமும் உண்டு
ஆனாலும்
ஏனோ
கறுப்பு மாடுகள்
எளிதில் விலை போவதில்லை.
நன்றி; யாழினி முனுசாமி ( உதிரும் இலை )
Labels:
கவிதை
பங்கு
தாத்தா செத்ததும்
ஒலக்க ஒரல்
அம்மி ஆட்டுக்கல்லுன்னு
ஒவ்வொண்ணுக்கும் போட்டி.
கறவ மாடும் கண்ணும் எனக்கு
காளையும் கிடாரியும் எனக்குன்னு
அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும்
அத்தன அடிதடி.
பாயில் சுருண்டு கிடக்கும் பாட்டிய
என்க்கு எனக்குனு
யாரும் சொல்லக் காணோம்...
ரூபாய் 2000 பரிசு பெற்ற கவிதை
-விஜிலா தேரிராஜன்(ஆனந்த விகடன் 14-4-02)
ஒலக்க ஒரல்
அம்மி ஆட்டுக்கல்லுன்னு
ஒவ்வொண்ணுக்கும் போட்டி.
கறவ மாடும் கண்ணும் எனக்கு
காளையும் கிடாரியும் எனக்குன்னு
அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும்
அத்தன அடிதடி.
பாயில் சுருண்டு கிடக்கும் பாட்டிய
என்க்கு எனக்குனு
யாரும் சொல்லக் காணோம்...
ரூபாய் 2000 பரிசு பெற்ற கவிதை
-விஜிலா தேரிராஜன்(ஆனந்த விகடன் 14-4-02)
Labels:
கவிதை
GOD'S OWN COUNTRY
Q: If Kerala is God's own country which North Indian State
is "Suburbs of Paradise ?"
Ans: Himachal Pradesh.
Q: What is a "green stick fracture"?
Ans: A fracture that is incomplete and deforms the bone.
Q: Which of these is not part of the U A E ?
Kuwait, Abu Dhabi, Dubai ,Sharjah
Ans: Kuwait.
Q: What is the scientific name for "belly button" or
navel ?
Ans: Umbilicus.
Q: Which eminent Indian Writer's latest book is
"The end of India ? "
Ans: Khushwant Singh.
courtesy: Young World (Hindu-17-5-03)

பொது அறிவு
உழைப்பைக் கொஞ்சம் அதிகரித்தால். . .
உழைப்பு
முதல் தேதியைச் சொல்லிச் சொல்லி
முப்பது நாளையும் தள்ளாதே
உழைப்பைக் கொஞ்சம் அதிகரித்தால்
முப்பது நாளும் முதல் தேதி !
உறவு
ஆற்று மணலே !
சிமெண்டுடன் கூடிக் கலந்து
சீக்கிரம் கலவையாகிக் கட்டிடமாய் நிற்கின்றாய்
உன்னைக் கட்டி எழுப்பிய
மனிதனுக்கு உனைப் போல்
ஒட்டி வாழத் தெரியவில்லையே
இந்த உண்மை ஏனோ புரியவில்லையே !
கொடை!
கடையேழு வள்ளல்கள்
கண் மூடாது இருந்திருந்தால்
நன் கொடை ரசீதுகள் கண்டே
ஓட்டாண்டிகளாகி இருப்பார்கள் !
நன்றி ; கவிஞர் தரணி (தண்ணீரின் தாகம்)

உழைப்புதான் கவிதை !
உழவனின் மகன் கேட்டான்
அப்பா,கவிதை என்றால் என்ன ?
விதைத்து அறுப்பது என்றான் உழவன்.
தையல்காரனின் மகன் கேட்டான்
அப்பா,கவிதை என்றால் என்ன?
கிழியாத வெதுவெதுப்பான ஆடைகளைத்
தயாரிப்பது என்றான் தையல்காரன்.
தளபதியின் மகன் கேட்டான்
அப்பா கவிதை என்றால் என்ன ?
இராவணுத்தை வழி நடத்தி செல்வது
என்றான் தளபதி.
கவிஞனின் மகன் கேட்டான்
அப்பா,கவிதை என்றால் என்ன ?
என்குத் தெரியாது என்றான் கவிஞன்
ஆனால் கவிதைகளை எழுதுவது
கவிதை ஆகாது மகனே !
இது ஒரு நாட்டுப் பாடல்.கிரேக்கத்தைச் சேர்ந்த
'கோஸ்டிஸ் பாப்பகோங்லோஸ்' என்ற கவிஞர்
எழுதியது.''உழைப்புதான் கவிதை, உழைப்பின்
கடமைதான் கவிதை என இக்கவிஞர் சிந்திக்கிறார்.
(முனைவர் மு.வளர்மதியின் ''நானும் என் கவிதையும்''
என்ற நூலிலிருந்து)

படித்ததில் பிடித்தது-கவிதை
இன்றே கடைசி
சிவபெருமானின் தலையில் வாழ்வதாய்
நம்புகிறாளே ஒழிய அடிவாரத்தில் இறங்கி
ஆண்டவனை இதுவரை தரிசித்ததில்லை.
குழந்தைகளுக்கு கதை சொல்லும்
அம்மாக்களின் வார்த்தைகள்
பொய்யாகி விடக்கூடாதே என்றுதான்
தினந்தோறும் வருவதாக
தனக்குள் சொல்லிக் கொள்கிறாள்.
இந்த இடத்தில் பார்க்கும போதே திருடும்
காக்கைகள் தொந்திரவில்லை.
பாட்டுப் பாடச் சொல்லும்
நரிகளும் வருவதில்லை.
முன்புக்கு இப்போது பரவாயில்லை.
பள்ளங்களுடன் வாழ்வது
பழக்கமாகி விட்டது.
தனிமையை விரட்ட கற்களுடன் பேச
கற்றுக்கொண்டு விட்டாள்.
தவ்வித் தவ்வி குதித்து வாழ்ந்த கதை சொல்ல
பிரபஞ்ச மெளனத்துடன்
புன்னகைக்கின்றன பாறைகள்.
எப்போதோ வந்த ஆரம்ஸ்ட்ராங்கிற்குப் பிறகு
யாருமே வாங்க வராததால்
அன்றைக்குச் சுட்ட வடைகளை அருகிலிருக்கும்
பள்ளத்தில் வீசி விட்டு எழுந்து போகிறாள்
நிலவில் வடை சுடும்
நெடுநாளையக் கிழவி.
கவிதை- நா.முத்துக்குமார் (குமுதம்1-11-2004)

பைசா கோபுரம் சாய்வதை நிறுத்தியது!
பைசா கோபுரம் சாய்வதை நிறுத்தியது!
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் முதல் முறையாக சாயாமல் நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 800 ஆண்டுகளில் முதல் முறையாக இப்போதுதான் சாய்வதை நிறுத்தியுள்ளது இந்தக் கோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.இத்தாலியின் பைசா நகரத்தில் உள்ள இந்த சாய்ந்த கோபுரம் உலக அதிசயங்களுல் ஒன்றாக கருதப்படுகிறது. 14 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த கோபுரம், 1174ம் ஆண்டு முதல் 1370ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் பல கட்டங்களாக கட்டப்பட்டது.கோபுரம் கட்ட ஆரம்பித்த பின்னர் மெதுவாக சாயத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து இன்ச், இன்ச்சாக சாய்ந்து வந்தது. இதனால்தான் இக்கோபுரத்திற்கு சாய்ந்த கோபுரம் என்ற பெயர் வந்தது.இந்த நிலையில் கோபுரம் சாயாமல் தடுக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்தத் திட்டத்திற்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. தற்போது முதல் முறையாக கோபுரம் சாயாமல் நின்றுள்ளது.கடந்த 800 ஆண்டுகளில் கோபுரம் சாயாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் 300 ஆண்டுகளுக்கு கோபுரம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். Source: Oneindia
Labels:
செய்தி
தங்கமே, வைரமே, முத்தே !
1) தங்கமே, வைரமே,முத்தே
குழந்தையைக் கொஞ்சினாள் தாய்
பிளாட்பார வாசம் !
2) கையில் பணம் தங்குவதேயில்லை
ரொம்பவும் சந்தோஷப்பட்டான்
வட்டிக் கடைக்காரன் !
3) புண்ணாக்கு சுமந்த மாட்டுக்கு
நாக்கு செத்துப் போச்சு
தினமும் வைக்கோல் !
(படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள் )
குழந்தையைக் கொஞ்சினாள் தாய்
பிளாட்பார வாசம் !
2) கையில் பணம் தங்குவதேயில்லை
ரொம்பவும் சந்தோஷப்பட்டான்
வட்டிக் கடைக்காரன் !
3) புண்ணாக்கு சுமந்த மாட்டுக்கு
நாக்கு செத்துப் போச்சு
தினமும் வைக்கோல் !
(படித்ததில் பிடித்த ஹைகூ கவிதைகள் )
Labels:
ஹைகூ
தண்ணீரின் தாகம்
பழி !
தோணி என்றுதான் எனக்குப் பெயர்
நீங்கள் கடத்தினீர்கள், நான் களங்கமானேன்
கைது செய்து என்னையும் குற்றஞ் சுமத்தி
கரையில் போட்டார்கள்.
நான் கள்ளத்தோணியாம் !
மூங்கில்
உதட்டோடு உறவாடியபோது
குழல் ஓசையானாய்
இறந்த உடலோடு உறவாடியபோது
பாடையானாய் !
தவிப்பு
சந்திரனில் கால் வைத்துக்
குடியேற நினைக்கின்றார் !
நான் செவ்வாயில் இதழ் வைத்துக்
குடியிருக்கத் தவிக்கின்றேன் !
நன்றி; கவிஞர் தரணி (தண்ணீரின் தாகம்)
தோணி என்றுதான் எனக்குப் பெயர்
நீங்கள் கடத்தினீர்கள், நான் களங்கமானேன்
கைது செய்து என்னையும் குற்றஞ் சுமத்தி
கரையில் போட்டார்கள்.
நான் கள்ளத்தோணியாம் !
மூங்கில்
உதட்டோடு உறவாடியபோது
குழல் ஓசையானாய்
இறந்த உடலோடு உறவாடியபோது
பாடையானாய் !
தவிப்பு
சந்திரனில் கால் வைத்துக்
குடியேற நினைக்கின்றார் !
நான் செவ்வாயில் இதழ் வைத்துக்
குடியிருக்கத் தவிக்கின்றேன் !
நன்றி; கவிஞர் தரணி (தண்ணீரின் தாகம்)
Labels:
கவிதை
பகுத்தறிவு
ஐந்து அறிவு ஜீவன்களின் கூட்டத்தில் தீர்மானம்!
ஆறாவது அறிவைப் பயன்படுத்தாத மனிதனை
எங்களோடு சேர்க்க வேண்டும் என்று !
(ஆர்.சுந்தர்ராஜன்,விராலிமலை)
2) வேண்டும்
காதல் இல்லா உலகம் வேண்டும்
காமம் இல்லா வாழ்க்கை வேண்டும்
வியாதி இல்லா உடல் வேண்டும்
யுத்தம் இல்லா நாடுகள் வேண்டும்
நாத்திகம் இல்லா ஆத்திகம் வேண்டும்
(தா.முருகேசன்,திருத்துறைப்பூண்டி)
நன்றி ; கல்கண்டு 26-5-03
ஆறாவது அறிவைப் பயன்படுத்தாத மனிதனை
எங்களோடு சேர்க்க வேண்டும் என்று !
(ஆர்.சுந்தர்ராஜன்,விராலிமலை)
2) வேண்டும்
காதல் இல்லா உலகம் வேண்டும்
காமம் இல்லா வாழ்க்கை வேண்டும்
வியாதி இல்லா உடல் வேண்டும்
யுத்தம் இல்லா நாடுகள் வேண்டும்
நாத்திகம் இல்லா ஆத்திகம் வேண்டும்
(தா.முருகேசன்,திருத்துறைப்பூண்டி)
நன்றி ; கல்கண்டு 26-5-03
Labels:
படித்ததில் பிடித்தது-கவிதை
தண்ணீரில் கண்டம் !
1) தண்ணீரில் கண்டம்
ஜோசியர் சொன்னார்
மதுவால் சாவு !
2)மருந்து எழுதினார்
சித்த வைத்தியர்
ஆங்கிலத்தில் !
3)ஆயிரம் ரூபாய் கேட்டதும்
மாயமாய் மறைந்தான்
அன்புக்காதலன் !
4)தனிக் குடுத்தனமா,கூட்டா ?
கருத்தான பட்டி மன்றம்
நடுவர் பிரம்மசாரி !
ஜோசியர் சொன்னார்
மதுவால் சாவு !
2)மருந்து எழுதினார்
சித்த வைத்தியர்
ஆங்கிலத்தில் !
3)ஆயிரம் ரூபாய் கேட்டதும்
மாயமாய் மறைந்தான்
அன்புக்காதலன் !
4)தனிக் குடுத்தனமா,கூட்டா ?
கருத்தான பட்டி மன்றம்
நடுவர் பிரம்மசாரி !
Labels:
படித்ததில் பிடித்தது-ஹைகூ
வாழ்க்கையின் இரகசியம்!
1)நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களைஉன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!
2) யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோஅவரே உண்மையில் உயர்ந்த மனிதர்! 3)பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது. 4)தீய செயல் குறித்து தெய்வத்தின் முன்னால் வெட்கப்படாதே!மனிதன் முன்பாக வெட்கப்படு! அப்பொழுதே உனக்கு விமோசனம் ஆரம்பம்! 5)மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிடஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்! 6)அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை.தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன. மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான்இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம். 7) ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை! 8)நன்றாகப் பேசுவது நல்லதுதான்ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது! சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது! 9)முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழிமெளனமாக இருப்பதுதான! பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய்! பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்! 10) தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்!வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்!இதுதான் வாழ்க்கையின் இரகசியம்
courtesy: www.ezhilnila.com

மூத்தோர் சொல்
இந்த நாள் இனிய நாள்
இந்த நாள் இனிய நாள் அரண்மனையில் பணிபுரியும் சாதாரண சேவகர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்; கலகல என்று சிரித்தபடி கவலைகள் இல்லாதவராகக் காரியங்கள் செய்வார். அவரைப் பார்த்த அரசருக்கு ஒரே ஆச்சர்யம். எப்படி இந்த ஏழை இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறான்? இவனுக்கு வருமானமோ குறைவு. வசதிகளும் இல்லை. மிகச்சிறிய வீட்டில் அதிக நபர்களுடன் வாழும் அவலம்... அப்படி இருந்தும் இவன் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று சிந்தித்தார் அரசர்."பிரமாண்டமான அரண்மனை, ஏகப்பட்ட எடுபிடிகள். மிக அதிக வருமானம் இத்தனையும் இருந்தும் நமக்கில்லாத நிம்மதி... மகிழ்ச்சி... இந்தப் பயலுக்கு எப்படி இருக்க முடியும்?' என்ற எண்ணம் அவரைக் குடைந்தது.
ஒருநாள் அவனை அருகில் அழைத்து, "உனக்கு வருத்தமே கிடையாதா? ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்?' என்று கேட்டார் அரசர்."மேன்மை தங்கிய மன்னரே... நான் ஓர் ஏழைக் காவலன். எங்கள் குடும்பத்தின் தேவைகள் மிக மிகக் குறைவு. மழையையும், வெயிலையும் மறைக்க ஒரு கூரை... வயிறு நிரம்ப ஏதோ ஓர் உணவு... மானம் காக்க ஒரு துணி... இதற்கு என் வருமானம் போது மானது. வேறு எந்த ஆசைகளையும் நான் வளர்த்து கொள்வதே இல்லை... அதனால், நிம்மதியாக இருக்கிறேன்..' என்று பணிவுடன் கூறினான் சேவகன்; விரக்தியாகச் சிரித்துக் கொண்டார் மன்னர்.
இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியைத் தம் அமைச்சரிடம் பகிர்ந்து கொண்ட மன்னர், "இவ்வளவு வருமானம் உள்ள நாம் எப்போதும் கவலையில் இருக்கிறோம். நம்மை விடக் குறைந்த வருமானம் உள்ள அவன் கவலையில்லாமல் இருக்கிறானே! எப்படி இது சாத்தியம்?' என்று பெருமூச்சு விட்டார். "வேண்டு மானால் அவனையும் நமது கவலைப் படுவோர் சங்கத்தில் உறுப்பினராக்கி விடலாம். ரொம்பவும் சுலபம்...' என்று பணிவுடன் சிரித்தார் அமைச்சர்."அதென்ன கவலைப்படுவோர் சங்கம்?' என்று வியப்புடன் கேட்டார் மன்னர். "அரசே... ஒரு பையை எடுக்க வேண்டும். அதில் 99 தங்கக் காசு களைப் போட்டுக் கட்ட வேண்டும். அந்த ஏழையின் வீட்டு வாசற்படியில் வைத்துவிட வேண்டும். பிறகு பாருங்கள் அவனது நடவடிக்கைகளை..' என்று சிரித்தார் அமைச்சர். "அப்படியே செய்யுங்கள்...' என்று உத்தரவிட்டார் அரசர். தன் வீட்டு வாசலில் கிடைத்த 99 பொற்காசுகளை ஒரு தடவைக்குப் பல தடவை எண்ணி, எண்ணி மாய்ந்தான் சேவகன். "ஒன்று குறைகிறதே... ஒன்று குறைகிறதே..' என்று புலம்பினான். எங்கே போயி ருக்கும் என்று அங்கும் இங்கும் தேடினான். அமைதி போய் விட்டது. தன் வீட்டில் பொற்காசு இருக்கும் விவரம் யாருக்கும் தெரிந்து விடுமோ என்று தடுமாறினான். எப்பாடு பட்டாவது பணம் சேர்த்து, அதை ஒரு தங்கக் காசாக மாற்றி நூறு பொற் காசுகள் என்று முழுமைப் படுத்த வேண்டும் என்கிற வெறி அவனுக்குள் ஏற் பட்டு விட்டது. அவனது கலகலப்பு, நிம்மதி, சந்தோஷம் எல்லாமே அந்த ஒரு தங்கக் காசு பற்றிய கவலைக்குள் கரைந்து போய்விட்டது. அதிகம் உழைத்தான்; பட்டினி கிடந்தான். தன் குடும்பத்தவரை "பொறுப்பற்றவர்கள்... ஊதாரிகள்' என்று சப்தம் போட்டான். பரபரப்பும், படபடப்பும் அவனது ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும் குடியேறி விட்டது! அது அரசருக்குத் தெரிந்தது. அமைச்சர் சொன்னார்... "அரசே... அவன் நமது 99 சங்க உறுப்பினர் ஆகி விட்டான்..' என்று.
அதாவது, அனுபவிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும், கிடைக்கத் தவறிய ஒன்றிற்காகவே ஏங்கும் முட்டாள்களின் உலகம் இது. இந்த மனோநிலை தான் நமது துயரங்களுக்கான முக்கிய காரணம். சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் கூட சந்தோஷப்பட முடியாதபடி இந்த மனோபாவம் நம்மைக் கெடுத்து விடுகிறது.
நன்றி; சுகிசிவம் (இந்த நாள் இனிய நாள் )

ஆன்மீகம்
திறமை காட்டும் அஞ்சலி !
கற்றது தமிழ் படத்தில் ஹோம்லியாக வந்த நடிகை
அஞ்சலி, சுந்தர்சி உடன் நடிக்கும் படத்தில், கவர்ச்சியாக
குத்தாட்டம் போட்டு,ரசிகர்களை கிறங்கடிக்கிறாராம் !
Labels:
சினிமா
சாபமும் புகழுக்கே !
தேவர்களில் ஒருவரான சங்கு கர்ணர்,பிரும்ம
தேவருக்கு மலர்கள் கொண்டு செல்வார். அவ்வாறு
கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தால்
பிரும்ம தேவரால், ஸ்ரீமந் நாராயணரின் திருவடியை
அர்ச்சனை செய்ய இயலாமல் போய்விட்டது.அதனால்
கோபமுற்று,பூமியில் அரக்கர் குலத்தில் பிறக்க
சாபமிட்டார். சாபவிமோசனம் அடைய,ஸ்ரீஹரி விஷ்ணுவே
காப்பாற்றுவார் என்றும் அருளினார்.
பூவுலகில் அசுரமன்னன் ஹிரண்யகசிபு மனைவி
லீலாவதி கருவுற்றிருந்தாள். நாரதரின் அறிவரையின்படி
ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை கூறி வந்தாள்.
கருவிலிருந்த குழந்தையும் கேட்டது. அக்குழந்தைதான்
பிரஹலாதன்.
வானுலகில் சங்கு கர்ணராக இருந்தவர்தான்
பிரஹலாதனாக வந்தார். இவர்தான் பின்னாளில்,
கலியுகத்தில் வியாகராஜர் என்று அழைக்கப்படும்
ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் ஆவார்.
சங்கு கர்ணராக இல்லாதபோது, இருந்த இரண்டு
அவதாரங்களும் மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தன.
சில சமயங்களில் வசவுகளும் சாபங்களும்
நன்மையைத் தரும் !
(சிந்திக்க வைக்கும் 35 கதைகள் என்ற நாலிலிருந்து)

என்று தணியும். . .
பாலகன் அழும் குரல் கேட்டு
பால் புட்டியுடன் ஓடி வந்தாள் பார்வதி
பயந்து போனாள். . .?
அங்கே அங்கமெல்லாம் மெலிந்த நிலையில்
அழுது கொண்டிருந்தார்கள்
ஆயிரம் ஞானசம்பந்தர்கள் !
(கவிதை --த.செல்வம்,புதுக்கோட்டை)
2) அகலிகை;
எத்தனை வேகமாய்ப் போனாலும்
எனது திருமண ரயிலை
என்னால் பிடிக்கவே முடிவதில்லை
எல்லா ராகங்களிலும் இசைத்து விட்டேன்
வருகிறவனெல்லாம் வார்த்தையோடு
போய் விடுகிறார்கள்.
வரனாக வரும் போது நரைத்த கிழவன் கூட
இதயத்தைச சிரைத்து விட்டுத்தான் வருகிறான்
இன்றைய இராமர்களுக்கு அகலிகைகளைக்
கல்லாக்கிப் பார்ப்பதில்தான் களிப்பு !
(கவிதை; டாக்டர் ஆர்.கோவி,ஈரோடு.)
நன்றி; சாவி12.9.90

ஒரு எகிப்திய ரெசிபி!
தேவையானவை;
கொண்டைக் கடலை -2 கப்,
உப்பு - தேவையான அளவு,
இஞ்சி பூண்டு விழுது - 2 மேஷைக்கரண்டி,
கொத்துமல்லி - அரை கட்டு,
பச்சை மிளகாய் -3 மிகப் பொடியாக நறுக்கியது.
கொண்டைக்கடலையை அரை மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இத்தோடு மற்ற சாமான்கள் அனைத்தையும் கலந்து வடை மாதிரி தட்டிப் பொரித்துக் கொண்டு, மெல்லிய பூல்கா சப்பாத்தியுடன் வைத்து, சாஸ், வெங்காயம், சீஸ் நறுக்கிய கோஸ் முதலியவைகளை வைத்து ஒரு கோன் மாதிரி சுற்றிப் பரிமாறவும்.
நன்றி ;சினேகிதி இதழில் மெனு ராணி

சமையல்
மூன்று இதழ்களும் கொஞ்சம் தூரிகையும்
1) தொலைக் காட்சி இணைப்பை
துண்டித்தது
எலிக்கு நன்றி !
2) அறுசுவை
உணவுடன் படையல்
பசியால் இறந்தவனுக்கு!
3)எங்கே கூடு கட்டுவது
புரியாமல் விழிக்கும்
அடுத்த நூற்றாண்டுப் பறவை.
4)'குழப்பம், -தினப்பலன் கூறியது
எதனால் குழப்பம் நேரும் ?
குழம்பியது மனசு.
5) இல்லை கடிகாரம்
ஆனாலும் தெரிகிறது நேரம்
பசி.
6)யானைக்கும், மனிதனுக்கும்
பிடிக்கிறது மதம்
அழிவின் தொடக்கம்.
7) ஏமாந்து விட்டதோ...
முதுகில் நாமம்
அணில் !
மூன்று இதழ்களும் கொஞ்சம் தூரிகையும்-ஹைகூ
கவிதைகள் தொகுப்பு நாலிலிருந்து

ஏன் அம்மா மறந்து போனாய்... ?
தூக்கம் முழுதாய்க் கலையவில்லை
அதட்டித்தான் எழுப்புகிறார்கள்
இயந்திரமாய்ப் பல் துலக்கி
அரைகுறையாய் குளித்து
அவசரமாய்த் திரும்புகையில்
என்னைப் பார்த்து சிரிக்கிறது
கல்லாய்ப் போன இட்லி.
நுனி நாக்கு ஆங்கிலம்
கம்யூட்டர்,
எல்லாமே வசப்பட்டு விட்டது
இந்த ஹாஸ்டல் வாழ்க்கையில். . .
பார்த்துப் பார்த்து கல்வி தந்தாய்
கொஞ்சம் உன் மடியில்
என்னைச் சாய்த்து
அன்பு தர மட்டும்
ஏன் மறந்து
போனாய் அம்மா ?
நன்றி;
http://www.kumudam.com/magazine/Snegiti/2008-05-16/pg14.php

அது என் இயல்பு !
தேள் ஒன்று கங்கையில் மிதந்து வந்தது. அது
உயிரை விட்டு விடுமே என பதைத்த துறவி
மெல்ல அதை எடுத்துக் கரையில் விட்டார். மறுகணம்
அது அவரைக் கொட்டி விட்டு மீண்டும் நீரில் விழுந்து
விட்டது.
மறுபடியும் அதை எடுத்துக் கரையில் விட்டார்.
மறுபடியும அது அவரைக் கொட்டி விட்டு நீரில்
விழுந்தது. இப்படியே பல முறை நடந்தது.
அதைப்பார்த்த ஒருவர் துறவியிடம்,'தேளை ஏன்
காப்பாற்றுகிறீங்க ? தேள் கொட்டுகிறதே வலிக்க
வில்லயா' என்று கேட்டார்.
கொட்டுவது தேளின் இயல்பு. உயிரைக் காப்பாற்றுவது
என் இயல்பு. உயிர் போகும் தருணத்தில் கூட தேள்
தன் இயல்பை விடவில்லை. வெறும் கொட்டு வலிக்கு
பயந்து நான் ஏன் என் இயல்பை விடவேண்டும் ? என்று
கேட்டார் துறவி.
நல்லது செய்வோம் என்று நினைத்தால் பிரதிபலனை
எதிர்பாராமலும்,வேதனைகளை தாங்கிக் கொண்டும்
தொடர்ந்து நல்லது செய்து கொண்டே இருக்க வேண்டும்.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன கதை

தமிழில் புதிர்கள்
1)சாம்பார் மணப்பதேன்
போர்வீரன் சிறப்பதேன் ?
விடை; பெருங்காயத்தால் !
2)என் வயிற்றுக்குள்ளிருக்கும்
எண்ணற்ற குழந்தைகள்
பிரகாசமாய் பிறந்து
பிறந்தவுடனே இறப்பார்கள். நான் யார் ?
விடை; தீப்பெட்டி.
3)அவனிதனில் ஓர் அற்புத தருவுண்டு
அதற்கு ஈராறு கிளைகளுண்டு
சீராரும் கிளைக்கு சிறுகிளை ஏழுண்டு
கிளைக்குப் பத்துப் பத்துப் பத்துக் கிளையுமுண்டு
நீல இலை பாதி வெண்மை இலை பாதி,
ஆக இலை ஒன்றாக- அது என்ன ?
விடை; ஆண்டு,மாதம்,வாரம்,நாள்,இரவு,பகல் !
4)உருண்ட வடிவமாயிருக்கும் உலகமல்ல
உடம்பெல்லாம் உரோமம் உணடு குரங்குமல்ல
உச்சிக் குடிமி உண்டு அந்தணனுமல்ல
மூன்று கண்ணுமுண்டு சிவனேயல்ல
உடைத்தால் வெளுத்து இருக்கும்
ஒரு குளம் ஜலம் தேங்கியிருக்கும்- அது என்ன ?
விடை; தேங்காய் !
(தமிழில் விடுகதை என்ற நாலிலுருந்து)

விடுகதை
ஜோக்ஸ்
ஜோக்ஸ்
1. கணவன்: வாஷிங் மெஷின் வாங்கலாமா... ஃப்ரிட்ஜ் வாங்கலாமா?மனைவி: உங்களுக்கு எது முதல்ல தேவையோ அதை வாங்கிக்கோங்க.
2. அம்மணி: என்னப்பா... வழக்கத்தை விட இன்னைக்கு பால் ரொம்ப தண்ணியா இருக்கு.பால்காரன்: வரும்போது நல்ல மழை. வீணாக்கக் கூடாதேன்னு பால் கேனிலேயே மழை நீரை சேமிச்சிட்டேன். அதான்...
3. பாலு: அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?வேலு : அந்த டாக்டர் எக்ஸ்ரே ஃபோட்டோ பிடிக்கும்போது ஸ்மைல் ப்ளீஸ்னு சொல்றார் . 4)தொண்டர் 1: நம்ம தலைவருக்கு என்ன அறிக்கை விடறதுன்னே தெரியலை.தொண்டர் 2: ஏன்... என்ன சொன்னார்?தொண்டர் 1: கட்சி விரிசலை நல்ல என்ஜினியர் வெச்சு சரி பண்ணிடலாம்னு அறிக்கை விட்டிருக்கார்.
courtesy"http://tamil.sify.com

நாளைய நட்சத்திரங்கள்!!
அன்று.... தலையைப் படிய வாரி எண்ணெய் முகத்தில் வடிய சீருடை முழுதாயணிந்து சுமக்க முடியாமல் புத்தக மூட்டையைச் சுமந்து கூட்ட நெரிசலிலும் இடிபாடுகளிலும் சிக்கித் தவித்துப் பேருந்தில் பயணம் செய்து பள்ளிக்குச் சென்றபோது பரிகாசம் பேசியோருண்டு! பரிதாபம் கொண்டோருண்டு! விமர்சித்தோரும் பலருண்டு!
இன்று.... படிப்பு முடிந்துவிட்டது . பட்டம் பெற்றாகிவிட்டது . பணியும் கிடைத்துவிட்டது. கை நிறையச் சம்பளம் , வளங்கள்,வசதிகள் ,வாகனங்கள் ஏவலாட்களென சொந்த வாழ்வில்.... என்னுடன் புத்தகம் சுமந்த பலரும் என்னைப் போன்றே வசதிகள் வளமுடன்....
பணிக்குச் செல்லும் நேரம் பள்ளிக்குச் செல்வோரைப் பார்க்கிறேன்! முதுகில் புத்தக மூட்டை.... அதில் புத்தகங்களுடன் அவரவரின் எதிர்காலம் பெற்றோரின் கனவுகள் கற்பனைகள் உழைப்பு நம்பிக்கையென அனைத்தையும் சுமந்து செல்லும் சிறார்கள்!
இதயம் பூரிக்கிறது நம் நாட்டின் நாளைய மன்னர்களைக் காண்கையில்! இன்று நாம் ஒளிர்வதைப் போல் நாளை ஒளிர இருக்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள்!!
oooOooo
- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்
courtesy:tamiloviam.com
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
Disclaimer
Privacy

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு
ஆந்திரப்பிரதேசம்-ஆருத்ரா கவிதைகள்.
பக்கத்து வீட்டில்;
பக்கத்து வீட்டுப் பசு
மேய்கிறது எங்கள் தோட்டத்தில்
பக்கத்து வீட்டுக் கோழி கூவுகிறது
எங்கள் வீட்டுச்சுவரேறி என
நினைத்துக் கொள்கிறோம் நாங்கள்.. . .
பக்கத்து வீட்டு நாய்
துரத்துகிறது எங்கள் பசுவை
பக்கத்து வீட்டுப் பூனை
தின்று விடுகிறது எங்கள் கோழியை
நினைத்துக் கொள்கிறார்கள்
அவர்கள் !
நன்றி; சிவசங்கரி (இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு)

தகப்பனார் ஆன ஆஞ்சநேயர் !
இராமனுடைய பட்டாபிஷேகம் முடிந்ததும்,
ஆஞ்சநேயரை அயோத்தியில் தங்க அனுமதிக்காமல்
திரும்பி போக சொன்னார் ஸ்ரீராமர்.
இந்திரஜித்தின் பிரும்மாஸ்திரத்தினால் தாக்குண்ட
இலக்குவனைக் காப்பாற்ற, இமயமலையில்
பயிராகி இருந்த சஞ்சீவி என்ற மூலிகையைக்
கொணரும் பணி அனுமனுக்குத் தரப்பட்டது. தம்பியின்
உயிர் காப்பாற்றப் பட்டதும் ''ஆஞ்சநேயரே நீங்கள்
என் தந்தையாகி விட்டீர்கள்'' என்றார் ஸ்ரீராமர்.
ஸ்ரீராமன் தன்னை ஏன் திரும்பி போகச் சொன்னார்
என்பது அனுமனுக்குப் புரிந்தது.
தகப்பனாரை மகன் அடிமையாக நடத்தக் கூடாது !
(சிந்திக்க வைக்கும் 35 கதைகள்-என்ற புத்தகத்திலிருந்து)

அம்மா சுட்ட தோசை
சிறுவர்களிடம் ஒரு கேள்வி !
ஒரு அம்மா பத்து தோசைகள் சுட்டார்கள்.அவர்களுக்கு
நான்கு மகன்கள்.முதல் மூன்று மகன்களுக்கும் தலா
மூன்று தோசைகள் கொடுக்கப்பட்டன. கடைசி மகனுக்கு
என்ன வரும் ?
விடை ஒன்று என்பது சரியான விடை. ஆனால் மிகச்
சரியான விடை ''அழுகை வரும் '' என்பதே !
Labels:
ஜோக்ஸ்
மனிதத் தலையின் மதிப்பு
மன்னர் சிவாஜி புத்த சந்நியாசியின் பாதத்தில்
சிரசை வைத்து வணங்கினார். இதைக் கண்டு மந்திரி
மனம் பதறினார்.
அரசர், மந்திரியிடம் செம்மறியாட்டின் தலை,வெள்ளாட்டின்
தலை, ஒரு மனிதத் தலை கொண்டு வரச்சொன்னார்.
அவ்வாறு கொண்டு வந்ததும், அவைகளை சந்தையில்
விற்று வரச்சொன்னார்.
மனிதத் தலையை மட்டும் விற்க இயலவில்லை,வாங்குவார்
யாரும் இல்லை என்றார் மந்திரி. இலவசமாக கொடுத்து வா
என்றார் அரசர். இலவசமாக ஏற்றுக் கொள்ள ஒருவர் கூட
முன்வரவில்லை என்றார் மந்திரி.
''அதனால்தான் நான் புத்த சந்நியாசியின் பாதம் பணிந்து
நான் பிறவி எடுத்த பயனைப் பெற்றேன் '' என்றார் அரசர்.
(சக்தி-தீபாவளி மலரில் படித்தது)

சிறுகதை
எண்களில் வாழ்க்கை
இறைவன் ஒருவன்
அம்மையப்பன் இருவர்
சைவக்குறவர் மூவர்
மறைகள் நான்கு
காப்பியங்கள் ஐந்து
முருக கடவுளின் முகங்கள் ஆறு
பிறவிகள் ஏழு
அட்டமாசித்தி எட்டென்பர்
கோள்கள் ஒன்பது
பூஜ்யம் வாழ்க்கைத் தத்துவம்.
கெளசல்யா ரங்கநாதன்(சக்தி-தீபாவளி மலர் )
அம்மையப்பன் இருவர்
சைவக்குறவர் மூவர்
மறைகள் நான்கு
காப்பியங்கள் ஐந்து
முருக கடவுளின் முகங்கள் ஆறு
பிறவிகள் ஏழு
அட்டமாசித்தி எட்டென்பர்
கோள்கள் ஒன்பது
பூஜ்யம் வாழ்க்கைத் தத்துவம்.
கெளசல்யா ரங்கநாதன்(சக்தி-தீபாவளி மலர் )
Labels:
படித்ததில் பிடித்தது-கவிதை
விண்மீன்கள் பளிச்சிடும் இரவில்….. காதலியுடன்
முல்லா நஸ்ருதீன் ஒரு பெண்ணைக் காதலித்தார். முல்லாவுக்கு எல்லாம் நல்லபடி அமைந்திருந்தது. ஆனால் அவருடைய கண்பார்வை மங்கலானது.ஆகவே அவர் கண் டாக்டரிடம் கேட்டார் : “ கண்ணுக்கு சோடாபுட்டி போட்டுக் கொண்டிருந்தால் அந்தப் பெண் எப்படி என்னைக் காதலிப்பாள் ? அவளுடைய முகம் கூட எனக்கு சரியாகத் தெரியவில்லையே! நான் கண்ணாடி போட்டபடி அவள் எதிரில் போகக் கூடாது : உடனே என்னை நிராகரித்து விடுவாள் , என்ன செய்யலாம் ?
2)“டாக்டர் ஆலோசனை கூறினார் : “ ஒன்று செய்யலாமே! வெகு தொலைவு வரை உம்மால் பார்க்க முடிவது போல் நடியும் . இப்படி அவள் நம்பும்படி ஏதாவது செய்து பாரும் ! “முல்லா இதை செய்து பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார். ஒரு நாள் பூங்காவில் உட்கார்ந்திருந்தபோது அவருக்கு ஒரு யுக்தி தோன்றியது . தூரத்தில் இருந்த ஒரு மரத்தில் ஒரு தையல் ஊசியைக் குத்திவிட்டு வந்தார்.நல்ல கண்பார்வை இருந்தால் கூட அவ்வளவு தொலைவில் உள்ள ஊசியை யாராலும் பார்க்க முடியாது. முல்லா விண்மீன்கள் பளிச்ச்சிடும் இரவில் அன்று அந்த மரத்திலிருந்து 100 அடி தொலைவில் தன் காதலியுடன் உட்கார்ந்திருந்தார், திடீரென அவளிடம் “அதோ அந்த மரத்தில் பொருப்பில்லாமல் யாரோ ,ஒரு தையல் ஊசியை குத்தி வைத்திருக்கிறார்களே ! '' என்று கூறினார். அப்பெண் முல்லாவின் கண்பார்வையின் மேல் ஏற்கனவே சந்தேகம் கொண்டிருந்தாள். அப்படி இருக்க இவ்வளவு தொலைவில் ஒரு ஊசி இருப்பதை அவரால் எப்படி காண முடிந்தது என்று ஐயம் கொண்டாள். மேலும் அவளாலும் அதை பார்க்க முடியவில்லை,அந்த மரத்தையும் கூட சரியாகப் பார்க்கமுடியவில்லை . “நஸ்ருதீன் , எனக்கு ஊசி ஒன்றும் தெரியவில்லையே,” என்று கூறினாள்.
முல்லா பந்தாவாக எழுந்து , “ நான் போய் அதை எடுத்து வருகிறேன் “, என்று கூறியபடி நடக்கலானார். ஓன்றிரண்டு அடி வைத்ததுமே தொப்பென்று தரையில் விழுந்தார். ஏனேன்றால் எதிரில் ஒரு எருமை மாடு நின்று கொண்டிருந்தது. இது அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.
3) ஓஷோ : எந்த வேஷமும் நெடு நேரம் நிலைத்திருக்காது! உங்கள் வேஷத்தை மக்கள் கண்டு பிடிக்க வெகுநேரமாகாது. ஆனாலும் மரியாதைக்காக நீங்கள் வேஷம் போடுகிறீர்கள் என்று உங்களிடம் அவர்கள் சொல்லுவதில்லை. ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது நாகரீகமாகிவிட்டது. ஓஷோ தமிழ் மாத இதழ் : மார்ச் 2006 ( வெளியிடு : ஓஷோ மெடிட்டேசன் ரிஸார்ட், திருச்சி)
courtesy: osho.tamil.blogspot.com

சிறுகதை (ஓஷோ)
Questions from God
God won't ask : What kind of car you drove ? HE will ask : How many people you drove who did not have transportation . God won't ask : The sq ft of your house ? HE will ask: How many people you welcomed to your house. God won't ask : About the clothes you had in your closet ? HE will ask: How many you helped to clothe . God won't ask : what your highest salary was ? HE will ask: If you have compromised your character to obtain it . God won't ask : how many friends you had? HE will ask: how many people to whom you were a friend . God won't ask : in which neighbourhood you lived HE will ask: how you treated your neighbours
courtesy:www.andhimazhai.com
courtesy:www.andhimazhai.com
Labels:
ஆன்மீகம்
இறைப்பற்று!
முனிவர் ஒருவருடைய சீடனுக்கு பலத்த சந்தேகம் ஒன்று ஏற்பட்டது. அதனை முனிவரிடமே கேட்டான், “சுவாமி, கடவுள்மீது பற்று வைத்தால் மற்ற பற்றுகள் எல்லாம் தளர்ந்துவிடும் என்று சொல்கிறீர்களே.. அது எப்படி?”அதனைக்கேட்டு புன்னகைத்த முனிவர், விறகுக்கட்டு ஒன்றை எடுத்து வருமாறு அந்த சீடனிடமே பணித்தார். அந்த சீடனை அழைத்து, “இந்த விறகுக் கட்டின்மீது இன்னும் இறுக்கமாக வேறொரு கயிறால் கட்டு!” என்றார். அப்படியே செய்தான் அந்த சீடன்.
“இப்போது முதலில் கட்டியிருந்த கயிற்றினைப் பார்!” என்று சொன்னார் முனிவர். சீடன் பார்க்க முதலில் கட்டி இருந்த கயிறு தளர்ந்து இருப்பது தெரிந்தது.“இப்படித்தான்.. கடவுள் மீதான பற்று எனும் கயிற்றினால் இறுகக் கட்டும்போது முதலில் பற்றி இருந்த குடும்பம், பந்தம் என்ற கட்டுகள் தாமாகவே தளர்ந்துவிடும்!” என்றார் முனிவர்.முனிவரின் விளக்கத்தால் பொருள் புரிந்து சந்தோஷம் கொண்டான் சீடன்.

விடியலைத் தேடி !
1) அழுகை;
குழந்தையின் அழுகை அன்னைக்குப் புரியும்
காதலியின் அழுகை (சிணுங்கல்) காதலனுக்குப்
புரியும்
மனைவியின் அழுகை கணவனுக்குப் புரியும்
அரசியல்வாதியின அழுகை மக்களுக்குப் புரியும் !
2) கவலை வேண்டாம் ! ;
பிறந்தது பெண் குழந்தையா ?
கவலையை விடுங்கள்
மருமகளற்ற நிம்மதியான
எதிர்காலம் காத்திருக்கிறது !
நன்றி' வ.பற்குணன் (விடியலைத் தேடி )

கண்ணின் கடைப்பார்வை !
கண்ணின் கடைப்பார்வை
காதலியர் காட்டி விட்டால்
மண்ணில் குமரருக்கு
மாமலையும் ஓர் கடுகாம்.
(பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகளிலிருந்து)
Labels:
படித்ததில் பிடித்தது-கவிதை
விலாசம் தேடும் வித்துக்கள்
நீ எந்த இனம் ? ;-
பெண்ணே !
உன் கூந்தலில் மேகத்தின் இனம்
உன் முகத்தில் வான் இனம்
உன் கண்ணில் மான் இனம்
உன் புருவத்தில் வில் இனம்
உன் நாசியில் சிற்பியல் இனம்
உன் இதழ்களில் மலரின் இனம்
உன் பற்களில் முத்துக்களின் இனம்
உன் கைகளில் மூங்கிலின் இனம்
உன் விரல்களில் வெண்டை இனம்
உன் இடையில் கொடி இனம்
உன தொடையில் வாழை இனம்
உன் கைகளில் சலங்கை இனம்
உன் மனதில் மந்தியின் இனம்
பெண்ணே
உலகத்தின் இனமெல்லாம்
உன்னிடத்தில்- நீ எந்த இனம்
கூறி விடு பெண்ணே !
கவிதையாக்கம்; நிலவோன்
பெண்ணே !
உன் கூந்தலில் மேகத்தின் இனம்
உன் முகத்தில் வான் இனம்
உன் கண்ணில் மான் இனம்
உன் புருவத்தில் வில் இனம்
உன் நாசியில் சிற்பியல் இனம்
உன் இதழ்களில் மலரின் இனம்
உன் பற்களில் முத்துக்களின் இனம்
உன் கைகளில் மூங்கிலின் இனம்
உன் விரல்களில் வெண்டை இனம்
உன் இடையில் கொடி இனம்
உன தொடையில் வாழை இனம்
உன் கைகளில் சலங்கை இனம்
உன் மனதில் மந்தியின் இனம்
பெண்ணே
உலகத்தின் இனமெல்லாம்
உன்னிடத்தில்- நீ எந்த இனம்
கூறி விடு பெண்ணே !
கவிதையாக்கம்; நிலவோன்
Labels:
படித்ததில் பிடித்தது - கவிதை
சிரிப்பும் சிந்தனையும்
பிரம்மாவிடம் 'இங்கிலாந்து எப்போது உருப்படும்'
என்று கேட்டான் ஆங்கிலேயன். ஒரு நாறு ஆண்டு
ஆகும் என்றார் பிரம்மா... இப்போ எனக்கு 65 வயது,
என் நாடு உருப்படும் அந்தப் பொன்னான காட்சியை
எப்படிப் பார்க்க முடியும் என்று அழுதான்.
இப்படியே அமெரிக்கன் கேட்க,'அமெரிக்கா உருப்பட
150 ஆண்டு ஆகும்' என்றார் பிரம்மா. இப்பவே எனக்கு
75 வயது ஆகிறது, அமெரிக்கா உருப்படும் அந்தப்
பொன்னான காட்சியை எப்படி பார்க்க முடியும் என்று
அழுதான்.
'இந்தியா எப்போது உருப்படும்' என இந்தியன் கேட்டான்.
உடனே பிரம்மா அழுத் தொடங்கினார். 'இந்தியா உருப்பட
நெடுங்காலம் ஆகும்.அந்தப் பொன்னான காட்சியைப்
பாரக்க
நானே உயிரோடு இருக்க மாட்டேனே,அதை நினைச்சுதான்
அழறேன்னார்.
நன்றி ; கவிமாமணி முனைவர் வேலூர் ம.நாறாயணன்
(சிரிப்பும் சிந்தனையும்)

நகைச்சுவை
உதிரும் இலை
எப்போதும் ஆவதில்லை
அம்மாவுக்கும் அண்ணிக்கும்
நெல்குத்தி...
முள்சுமந்து...
குமைந்த கதை சொல்லி
பொருமுகிறார் அம்மா
காஸ் அடுப்பும் கிரைண்டரும் வாய்த்த
அண்ணியை நினைத்து
சோற்றில் கல்
குழம்பில் உப்பு
தண்ணியில் முடி
ஏதெனுமொன்று கிடைத்து விடுகிறது
அண்ணியோடு சண்டை பிடிக்க
அப்பாவின் நேற்றைய நிலை
இன்று அண்ணனுக்கு
பாட்டியை 'கொடுமைக்காரி' என்ற அம்மா
உணரவில்லை
தானும் அவளாகவே
மாறி விட்டிருப்பதை !
நன்றி ' யாழினி முனுசாமி (உதிரும் இலை )
அம்மாவுக்கும் அண்ணிக்கும்
நெல்குத்தி...
முள்சுமந்து...
குமைந்த கதை சொல்லி
பொருமுகிறார் அம்மா
காஸ் அடுப்பும் கிரைண்டரும் வாய்த்த
அண்ணியை நினைத்து
சோற்றில் கல்
குழம்பில் உப்பு
தண்ணியில் முடி
ஏதெனுமொன்று கிடைத்து விடுகிறது
அண்ணியோடு சண்டை பிடிக்க
அப்பாவின் நேற்றைய நிலை
இன்று அண்ணனுக்கு
பாட்டியை 'கொடுமைக்காரி' என்ற அம்மா
உணரவில்லை
தானும் அவளாகவே
மாறி விட்டிருப்பதை !
நன்றி ' யாழினி முனுசாமி (உதிரும் இலை )
Labels:
படித்ததில் பிடித்தது-கவிதை
பல் மருத்துவம்-சில உண்மைகள் !
ஒரு மருத்துவரிடம் பல் நோவுக்கெனச் சிகிச்சைக்குச் சென்றிருந்தபோது பொய்ப்பல் கட்ட அளவுகள் எடுத்துப் பூர்வாங்கப் பணிகள் துவக்கப்பட்ட அமர்வில், மெழுகுக் கலவையின் சூடாக்கிய பல்வடிவை வாயினுள் இட்டு , முகத்தின் மீது செல்லோ டேப் பலவாறாக ஓட்டிவிட்டு 61, 62. 63, 64, 65, 66. வரை ஆங்கிலத்தில் உறக்க உச்சரிக்கக் கூறினார். அவரது கூற்றின்படி உச்சரித்து வாய் கழுவி எழும் போது அவருக்குப் பிரியமான மந்திர எண்களாஅவை ? எனக் கேட்டேன். அவர் முறுவல் பூத்து இதுநாள் வரையில் என் அனுபவத்தில் இப்படி ஒரு கேள்வியை எவரும் கேட்டதில்லை என்று கூறி விளக்கம் சொல்லிப் பாராட்டினார். அந்த எண்கள் வாயின் உதடுகளின் குவிப்பு, நாவின் சுழற்சி, மடிப்பு, திண்மை,மென்மை, வலிமை இவற்றின் தொகுப்பாக அந்த எண்களின் உச்சரிப்பு இருக்கும். அதனை வைத்து உங்கள் உட்தாடையினில் பல்செட் எவ்வாறு பொருந்துகின்றது என்பதை நிர்ணயிக்க முடியும் என்றார். என் கேள்வி மிகவும் அற்பமானதாகத் தென்பட்டாலும் அதன் உண்மைப் பொருளைக் கூறிய அம்மருத்துவரை நான் மிகவும் மதிக்கிறேன்.
நான் தொடர்ந்து மின்னஞ்சலில் பெற்று படிக்கும் பயனுள்ள
வலைத்தளம் http://pkp.blogspot.com ஆகும். ஒரு மூத்த குடிமகன் தனது
அனுபவத்தை இவ்வலையில் பகிர்ந்து கொண்டுள்ளார்
பயனுள்ள தகவல் என்பதால்,எனது பதிவில் இட்டுள்ளேன்.

மருத்துவம்
இடது காதால் ஹலோ!
அடுத்த முறை கைப்பேசியில் அழைப்புவந்தால் இடது காதால் மட்டும் ஹலோ சொல்லுங்கள். அப்பல்லோ மருத்துவ குழுவினர் சொல்கின்றார்கள். மின்னஞ்சலில் வந்தது.படம் கீழே.அப்படியே ரொம்ப நேரமாய் கைப்பேசியை காதிலேயே வைத்திருப்பதும் நல்லதில்லையாம். புளூடூத்தோ அல்லது ஒரு ஹெட்செட்டோ அல்லது ஸ்பீக்கர் போனோ பயன்படுத்தி கைப்பேசியை சற்று தூரமாய் வைத்திருத்தல் நல்லது.
ஆண் மகன்கள் தங்கள் கால்சட்டைப்பையில் அலைப்பேசியை ரொம்பநேரமாய் வைத்திருத்தல் நல்லதில்லையாம். "எதிர்காலத்துக்கு" மிகப் பக்கத்தில் இது போன்ற அலைவீச்சுக்கருவிகள் இருப்பது நல்லதில்லை என்கின்றார்கள்.
Labels:
பொது-தகவல்
சிலந்தி ஏன் பூச்சிகளைப் பிடிக்கிறது ?
உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினர்கள்
சொன்ன கதைகளை குழந்தைகள் வாசிப்பதற்காக
'கால் முளைத்த கதைகள்' என்ற தலைப்பில் மொழி
பெயர்த்து தொகுத்தளித்துள்ளார் திரு.எஸ்.ராமகிருஷ்ணன்.
(உயிர்மை பதிப்பக வெளியீடு)
அதிலிருந்து சீன பழங்குடியினர் சொன்ன ஒரு கதை;
சிலந்தி ஏன் பூச்சிகளைப் பிடிக்கிறது ?
பூச்சிகள்,பறவைகள் யாவும் கல்வி கற்றுக்கொள்ள
வேண்டும் என்று கடவுள் ஒரு நாள் ஆணையிட்டார்.
அதனால் பூச்சிகள் படித்து அறிவாளியாகிவிட்டன.
சிலந்தி தானும் கல்வி கற்க வேண்டும் என்று
ஆசைப்பட்டு பூச்சிகளிடம் தனக்குப் பாடம் சொல்லித்
தருமாறு கேட்டது.பூச்சி அதற்கு நீ ஒரு முட்டாள்,
உனக்கு எதற்குப் படிப்பு என்று கேலி செய்தது.
2) சிலந்தி பல நாட்கள் யோசித்துவிட்டு பிறகு படித்த
பூச்சிகளைப் பிடித்து தின்று விட்டால் தான் அறிவாளி
ஆகிவிடலாம் என்று முடிவு செய்தது. அன்றிலிருந்துதான்
சிலந்திகள் பூச்சிகளைப் பிடித்து தின்னத் துவங்கின.

சிறுவர் கதை
முத்தம் கொடுத்தாள் !
'' அம்மா...உனக்கு பேத்தி பிறந்திருக்காம்மா...''
மகன் ராகவ் தகவல் சொன்னதும் மகிழ்ந்தாள் தாய்
காயத்ரி.
''டேய்..குழந்தையைப் பார்க்கணும் போல இருக்குடா...''
''ம்...அஞ்சு நிமிஷம் பொறுத்துக்கோ...''
ஐந்து நிமிட இடைவெளிக்குப் பின்...
''அம்மா...குழந்தை போட்டோவை மெயில்ல
அனுப்பியிருக்கேன்...நெட்டை ஓப்பன் பண்ணிப்பாரு...''
நியூ ஜெர்சியில் வசிக்கும் ராகவ், கும்பகோணத்திலுள்ள
அம்மாவுக்கு அனுப்பிய போட்டோவை கம்ப்யூட்டரில்
பார்த்து முத்த மழை பொழிந்தாள் காயத்ரி !
(கே.கே.புதூர்.எம்.பி.தினேஷ்)
நன்றி ; குங்குமம் (28-2-2002)

பிடித்தால் என்னுடன் ஜாலியாக இருக்கலாம்
முல்லா தான் மிகவும் குண்டாக இருப்பதை நினைத்து மிகுந்த வருத்தத்தில் இருந்தார் , அப்போது நாளிதழில் வந்த ஒரு( கீழ்கண்ட ) விளம்பரம் அவரைக் கவர்ந்தது. “ மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு! (1) சாதா உடற் இளைப்பு –ரூ 1,000/- ஒரு மணி நேரம் ( 2 - 5 கிலோ வரை) (2.). சூப்பர் ட்ரிம்மர் - ரூ 2,000/- இரண்டு மணி நேரம் ( 6-10 கிலோ வரை) (3.) ஹெவி ட்ரிம்மர் - ரூ 3,000/- மூன்று மணி நேரம் ( 11 – 15 கிலோ வரை ) (4.) அல்டிமேட் ட்ரிம்மர் - ரூ 10,000/- கால வரையரை இல்லை ( எடை வரையரை இல்லை ) முன்பதிவிற்கு முந்துங்கள்''.
முல்லா அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் அதை முயற்சி செய்து பார்த்துவிடுவது என முடிவெடுத்தார். ஆனாலும் முதலில் சாதா முறையில் முதலில் பரிசோதிக்க விரும்பி அதற்கான பணத்தைக் கட்டினார். அவர் ஒரு காலியான அறையில் விடப்பட்டார். அந்த அறை 16 x 16 என்ற அளவில் இருந்தது அதன் மூலையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார் அவருடைய கையில் ஒரு அட்டை, அதில் “ ஒரு மணி நேரத்திற்குள் என்னை துரத்திப் பிடித்தால் என்னுடன் ஜாலியாக இருக்கலாம் “ என்று எழுதியிருந்தது , முல்லா அந்த பெண்னை துரத்த ஆரம்பித்தார் – அவருக்கு எல்லாம் நல்ல படியாகவே முடிந்தது – அவர் துரத்திய துரத்தலில் அவருடைய எடையும் கணிசமாக குறைந்தது..முழு திருப்தியுடன் அதற்கு அடுத்த முறையை பரிசோதிக்க விரும்பினார். இந்த முறையில் வித்தியாசம் அறையின் அளவு
40x40, சாதா முறையைவிட நல்ல அழகான பெண் , கால அவகாசம் 2 மணி அவ்வளவுதான், மற்றபடி முறை ஒன்றுதான். இங்கும் அவருக்கு முழுதிருப்தி. மிகவும் மகிழ்ச்சியுடன் அடுத்த முறையை தேர்ந்தெடுத்தார் வித்தியாசம் அறையின் அளவு 75x75 , மிக அழகான பெண் , கால அவகாசம் 3 மணி நேரம். முல்லா கணிசமாக எடை குறைந்திருந்தார். அவருக்கு , எல்லா முறைகளிலும் தான் சிறப்பாக செய்ததை எண்ணி அளவில்லா ஆனந்தம் , கடைசியாக அல்டிமேட் ட்ரிம்மர் முறையிலும் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தார், அதற்கான பணத்தையும் கட்டினார். வரவேற்பாளர் அவரிடம் 16 வது மாடிக்கு நடந்து செல்லும் படி சொன்னார், முல்லாவும் தான் அடையப்போகும் சந்தோசத்தை எண்ணியபடியே கஷ்டப்பட்டு 16 மாடிக்கு வந்தார் .அங்கு அவர் 42 வது மாடிக்கு 15 நிமிடத்திற்க்குள் ஓடி வந்து சேர வேண்டும் அப்படி வந்தால் தான் பயிற்சி உண்டு என தெரிவிக்கப்பட்டது .முல்லாவிற்க்கு வேறு வழியும் இல்லை. தான் காணப்போகும் மிக மிக அற்புதமான அனுபவத்தை நினைத்தவாறே உயிரைக் கொடுத்து ஓடி 42 வது மாடியை 13 நிமிடத்தில் அடைந்தார். அது மிகப்பரந்த ஒரு மொட்டை மாடி. அதன் அளவு சுமார் 500x500 அடி பரப்பளவு இருக்கும. அதன் மூலையில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான். அவர் மொட்டை மாடியை அடைந்ததும் அவருக்குப்பின் கதவு மூடப்பட்டது, முல்லா மூச்சு வாங்கியவாரே அந்த அறையை நோக்கி நடந்தார் அங்கே ஒரு பெரிய மனிதக்குரங்கு “ நான் உன்னை துரத்திப் பிடித்தால் , என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன் “ என்ற வாசகம் எழுதிய அட்டையுடன் அமைதியாக அமர்ந்திருந்தது-ஓஷோ.

Don't mess with Women
FBI job opening:-
The FBI had an opening for an assassin. After all the background checks,interviews and testing were done, there were 3 finalists; two men and awoman.
For the final test, the FBI agents took one of the men to a large metal door and handed him a gun. "We must know that you will follow your instructions no matter what the circumstances. Inside the room you will find your wife sitting in a chair . . . Kill her!!"
The man said, "You can't be serious. I could never shoot my wife."
The agent said, "Then you're not the right man for this job. Take yourwife and go home."
The second man was given the same instructions. He took the gun and wentinto the room. All was quiet for about 5 minutes. The man came out with tears in his eyes, "I tried, but I can't kill my wife." The agent said,"You don't have what it takes. Take your wife home."
Finally, it was the woman's turn. She was given the same instructions, to kill her husband. She took the gun and went into the room. Shots were heard, one after another. They heard screaming, crashing, banging on the walls. After a few minutes, all was quiet. The door opened slowly and there stood the woman, wiping the sweat from her brow. "This gun was loaded with false bullets" she said. "I had to beat him to death with the chair!!"
MORAL:Women are crazy. Don't mess with them
courtesy: http://englishcolumn.blogspot.com/2008/05/dont-mess-with-women.html

Jokes
கொட்டுங்கள் கோடி ரோஜாப் பூக்களை !
சொல்லில் அடங்கா ஆத்திரம்
சும்மா விடக்கூடாது அவளை
கொண்டு வந்து
கொட்டுங்கள்
கோடி ரோஜாப் பூக்களை !
சும்மா விடக்கூடாது அவளை
கொண்டு வந்து
கொட்டுங்கள்
கோடி ரோஜாப் பூக்களை !
நன்றி; மீரா (குக்கூ )
Labels:
படித்ததில் பிடித்தது-கவிதை
குயில் மீண்டும் கூவுகிறது
1) கோழியும் சேவலும்
குப்பையைக் கிளறும்
விடியற் காலையில்
கண் மூடிக் கிடக்கும்
ஊர் நாய் ஒரு மூலையில்
இரவெல்லாம் குரைத்த அசதியில் !
2) கும்பிட்டுப் போனான்
குமரன் தீமூட்டி,
மல்லிசேரி பீடியை
எடுத்துப் பற்ற வைத்தான்
மயானத் தோட்டி
எரியும் அப்பா பிணத்தில்!
3) பழமை புதுமை
இரண்டுக்கும் நாங்கள் பாலம்
எலி வாகனம்
ஹெலிகாப்டர் வாகனம்
இரண்டையும் கொண்டாடும்
எங்கள் காலம்!
நன்றி ; மீரா.(குக்கூ-கவிதை தொகுப்பு)
குப்பையைக் கிளறும்
விடியற் காலையில்
கண் மூடிக் கிடக்கும்
ஊர் நாய் ஒரு மூலையில்
இரவெல்லாம் குரைத்த அசதியில் !
2) கும்பிட்டுப் போனான்
குமரன் தீமூட்டி,
மல்லிசேரி பீடியை
எடுத்துப் பற்ற வைத்தான்
மயானத் தோட்டி
எரியும் அப்பா பிணத்தில்!
3) பழமை புதுமை
இரண்டுக்கும் நாங்கள் பாலம்
எலி வாகனம்
ஹெலிகாப்டர் வாகனம்
இரண்டையும் கொண்டாடும்
எங்கள் காலம்!
நன்றி ; மீரா.(குக்கூ-கவிதை தொகுப்பு)
Labels:
படித்ததில் பிடித்தது-கவிதை
தேவதைகள்
எத்தனை அவசரமாய் இருப்பினும்
கதவைத் தட்டுவதாயின்
மெல்லத் தட்டுங்கள்
நீங்கள்
தட்டும் கதவை
ஒரு தேவதை கூட திறக்கலாம் !
நன்றி ; தமிழ்தாசன் (பட்டாம்பூச்சிகளின் சாபம்)
Labels:
படித்ததில் பிடித்தது-கவிதை
சாமர்த்தியம்
சாமர்த்தியங்களுடன் வாழ்கின்றோம்
நம்மில் நாம்
வெளிப்பட்டு விடாதபடி
எல்லா வார்த்தைகளையும் பேசிவிடுகிறோம்
எதுவும்
புரிந்து விடாதபடி
தொலைபேசிகளின் முன்னால்
பேசிக்கொள்கிறோம்
மொழிகள் தீர்ந்து விடாதபடி
சிறிய நிராகரிப்பிலும்
தளர்வுற்றுப் போகிறோம்
பிரியம் நஷ்டப்படாதபடி
வைராக்கியமாய்
விழித்துக்கொண்டே இருக்கிறோம்
அந்தக் கனவை எதிர்பார்த்து
ஒரு போதும் நிகழப்போவதில்லை
ஒரு பிரியம்.
நன்றி ; தமிழ்தாசன் (பட்டாம் பூச்சிகளின் சாபம்)

மெய்யான பொய்கள்
அத்தனையும் இருக்கின்றன அப்படியப்படியே
நான் வளர்ந்து நிற்கிறேன்
காலத்தின் கடனாளியாய் !
சிறு வயதின் விளையாட்டு நம்பிக்கைகள்
வேரடி நீராய்க் கசிய
நினைவின் கிளையில் பால்யம் பூக்கிறது !
மாடு முட்டும் என வெற்றிலை தவிர்த்தது
மழைக் கோழிகளுக்குத் துவட்டி விட்டது
முதல் பல் விழுகையில் முற்றத்துக் கூரையை
சொர்க்கமாக்கி சாணம் பொதிந்து எறிந்தது
புளிய மரத்து ஆந்தை
குலசாமி குரலாய் தூங்கச் சொன்னது
நினைவுகள் நுரைக்கும் கடைசி நிமிடந்தோறும்
கழனிக்கு எனை வாங்கியதாய்
அப்பா சொன்ன பொய் மட்டும்
புன்னகைக்க வைத்து விடுகிறது !
சு.தங்கலீலா (ஆனந்த விகடன் 20-2008)

MICROWAVED WATER
A 26-year old person decided to have a cup of coffee. He took a cup of water and put it in the microwave to heat it up (something that he had done numerous times before). I am not sure how long he set the timer for, but he told me he wanted to bring the water to a boil. When the timer shut the oven off, he removed the cup from the oven. As he looked into the cup, he noted that the water was not boiling, but instantly the water in the cup 'blew up' into his face.
The cup remained intact until he threw it out of his hand but all the water had flown out into his face due to the build up of energy. His whole face is blistered and he has 1st and 2nd degree burns to his face which may leave scarring. He also may have lost partial sight in his left eye.
While at the hospital, the doctor who was attending to him stated that this is fairly common occurrence and water (alone) should never be heated in a microwave oven. If water is heated in this manner, something should be placed in the cup to diffuse the energy such as: a wooden stir stick, tea bag, etc. It is however a much safer choice to boil the water in a kettle.
(மின் அஞ்சலில் பெறப்பட்டது)

ஓஷோ சொன்ன கதைகளில் ஒன்று
ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நண்பன் கிண்டலாக , “ நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் “ என்று சொன்னான்.முல்லா கம்பீரமானார். “ எப்போது அவள் வ்ருகிறாள் ? “ என்று கேட்டார்.“ இங்கு ஏறத்தாழ இரவு ஒருமணிக்கு” என்றான் அவன். அந்த நாள் நசுருதீனின் பொழுது மன அமைதியற்றுக் கழிந்தது. இரவு உணவு கூட சாப்பிடவில்லை. இரவு பத்து மணி அடித்தது. தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று ஒரு மரத்தின் மறைவில் உட்கார்ந்து கொண்டார். “ இன்று அவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்டுவது “ என்று முடிவு செய்திருந்தார்.நேரம் போய் கொண்டே இருந்தது.அவரது மனைவியும் வரவில்லை. அவளது காதலனும் வரவில்லை.இரவின் அமைதியில் ஒரு மணி அடித்தது.அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது.''தனக்கு
திருமணம் ஆகவில்லை'' என்பது.
ஓஷோ : மனிதன் கனவிலேயே வாழ்கின்றான் , இந்த கனத்தில் வாழ்வதில்லை : ஓஷோவின் குட்டி கதைகள்
திருமணம் ஆகவில்லை'' என்பது.
ஓஷோ : மனிதன் கனவிலேயே வாழ்கின்றான் , இந்த கனத்தில் வாழ்வதில்லை : ஓஷோவின் குட்டி கதைகள்
Labels:
படித்ததில் பிடித்தது-சிறுகதை
ஏனென்று தெரியவில்லை !
அலங்கரித்த மாலையுடன்
அசை போடும் ஆட்டிற்கு
தெரியவில்லை விரைவில்
அறுபடும் தன் தலை
துடித்திடும் உடல் என்று !
மின்னிடும் பட்டில் கண்களில் களிப்புடன்
தலை குனியும் மணப்பெண்ணுக்குத்
தெரியவில்லை இனிதான் சுமையென்று !
மழைத்தண்ணீரில் ஓய்வின்றி கத்தும்
வறட்டுத் தவளைக்குத் தெரியவில்லை
வாழ்க்கை சில நாளென்று`!
கூட்டினுள் இருக்கும் குஞ்சுகள் தனதென்று
காத்திடும் காக்கைக்குத் தெரியவில்லை
குயில் குஞ்சும் உண்டென்று !
ஏமாற்றிப் பிழைத்து ஏராளமாய் சேர்த்திடும்
எத்தனுக்குத் தெரியவில்லை எமன் வரும்போது
எதுவும் உடன் வருவதில்லை என்று !
நன்றி; இராம.விஜயலட்சுமி (உறவி-தமிழ் மாத இதழ்)

கடல் பயணத்தில் முல்லா
கடல் பயணத்தின் போது கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
முல்லா பயம் ஏதுமில்லாமல் இருப்பதைப் பார்த்து
வியந்த நண்பர் அவரிடம் ''கப்பலில் அமைதியுடன் இருக்க
எப்படி முடிகிறது'' என கேட்டார்.
உடனே முல்லா தன் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து கொல்லப்
போவதாக கூறினார். அவளோ கலகலவென்று சிரித்தாள்.
உனக்கு ஏன் பயம் ஏற்படவில்லை எனக் கேட்ட போது,அதற்கு
அவள் சொன்னாள், ''கத்தி கொல்லும் வல்லமை உடையதுதான்,
ஆனால் அதைப் பிடித்திருக்கும் கை என் அன்புக் கணவருடையது
அல்லவா ?'' என்றாள்.
இதைக் கேட்ட நண்பருக்கு உண்மை புலப்பட்டது. அலைகள்
கோரமானவை. . . ஆனால் ஆட்டி வைப்பது அன்புடைய ஆண்டவன்
அல்லவா ?
(சுகிசிவம் சொற்பொழிவில் கேட்டது.)

நமீதாவைப் பார் சிரி !
!) எதுக்கு டாக்டர் கிளினிக் உள்ளே நமீதா போட்டோவை
மாட்டி வெச்சிருக்கீங்க ?
நமீதாவைப் பார்த்து நீங்க பல்லைக் காட்டும்போது உங்க
பல்லைப் பிடிங்கிட்டா உங்களுக்கு வலியே தெரியாதே !
மாட்டி வெச்சிருக்கீங்க ?
நமீதாவைப் பார்த்து நீங்க பல்லைக் காட்டும்போது உங்க
பல்லைப் பிடிங்கிட்டா உங்களுக்கு வலியே தெரியாதே !
2)செருப்பு கடிச்சதுக்குப் போய் ஏன் இப்படி பயப்படறீங்க ?
இது பாம்பு தோல்ல பண்ண செருப்பு டாக்டர் ! அதான்.
3 டாக்டர் ஏன் மறுபடியும ஊசி போடுறீங்க ?
இருபது ரூபாய் சில்லறை இல்லை !
நன்றி; குமுதம் (28.5.08)
Labels:
ஜோக்ஸ்
கடலைக் காட்டுதல்
கடலைக் காட்டுவதற்காக
கூழாங்கற்களை
உருட்டிச் சென்றது
நதி
(பா.விஜயராமன்,திட்டச்சேரி.)
அலங்கோலம்;-
கிறுக்கல்களற்ற சுவர்கள்
அடுக்கி வைக்கப்பட்ட
அலங்காரப் பொருட்கள்
ஒழுங்காக மாட்டப்பட்ட
ஓவியங்கள்
ஒவ்வொரு பொருளும்
அதனதன் இடத்தில் என
காட்சியளிக்கிறது
குழந்தைகளற்ற வீடு.
(வடுவூர் சிவ.முரளி,புலிவலம்.)
மனசு ;-
மகள் பேச்சை மாப்பிள்ளை
தட்டவே மாட்டார் என்று
பெருமிதப்படும் அதே அம்மாதான்
கல்யாணத்திற்குப் பிறகு மகன்
'பொண்டாட்டிதாசன்'
ஆகிவிட்டான் என்று
வருத்தப்படவும் செய்கிறாள்.. . .!
(புவனா நித்திஷ்,திருமாளம்)
நன்றி ; குங்குமம் (27-9-07)
கூழாங்கற்களை
உருட்டிச் சென்றது
நதி
(பா.விஜயராமன்,திட்டச்சேரி.)
அலங்கோலம்;-
கிறுக்கல்களற்ற சுவர்கள்
அடுக்கி வைக்கப்பட்ட
அலங்காரப் பொருட்கள்
ஒழுங்காக மாட்டப்பட்ட
ஓவியங்கள்
ஒவ்வொரு பொருளும்
அதனதன் இடத்தில் என
காட்சியளிக்கிறது
குழந்தைகளற்ற வீடு.
(வடுவூர் சிவ.முரளி,புலிவலம்.)
மனசு ;-
மகள் பேச்சை மாப்பிள்ளை
தட்டவே மாட்டார் என்று
பெருமிதப்படும் அதே அம்மாதான்
கல்யாணத்திற்குப் பிறகு மகன்
'பொண்டாட்டிதாசன்'
ஆகிவிட்டான் என்று
வருத்தப்படவும் செய்கிறாள்.. . .!
(புவனா நித்திஷ்,திருமாளம்)
நன்றி ; குங்குமம் (27-9-07)
Labels:
படித்ததில் பிடித்தது-கவிதை
மேசை துடைக்கும் குழந்தை !
ரசப்பூச்சு வெளிறிய கண்ணாடி
அழுந்தக் கழுவப்படும் முகம்
ஒரு கணம் இறந்த புத்தனின் வதனம்
அள்ளி ஊற்றினால்
அடிப்புறத்தைச் சுரண்ட வேண்டிய அளவு தண்ணீர்
முதுகுக்குக் கரமெட்டாமல் ஒரு குளியல்
ஆடிய நீர் விளையாட்டுகளில்
ஏரிகளின் அடிமடி அதிர்ந்ததொரு காலம்
உடலை இறுக்கிப் பிடிக்கும்
அழுக்குச் சட்டையை
அவசரமாய் மாட்டிக்கொண்டு
கடைக்கு ஓடினால்
கொடுஞ்சொல் வசவுகளுடன்
வரவேற்கும் முதலாளி
தலை குனிந்த படி
வாளியைக் கைக் கொண்டு
நம் மேசையருகே வருகிறான்
அவனை மடியமர்த்தி
நாம் உண்ணும் அமுதை
அவனுக்கு ஊட்டி
செல்லம் கொஞ்சி
அழகு பார்க்க வேண்டிய நாம்
அதட்டுகிறோம் . . .
''டேய் !
மேசையை சுத்தமாத் துடைடா !''
நன்றி ; மகுடேசுவரன் (ஆனந்த விகடன்-6-2-08)

1) மயக்க மருந்து கொடுக்காம . . .
பெண்: டாக்டர் நாங்க அவசரமாகப் போக வேண்டியிருப்பதால் மயக்க மருந்து எதுவும் கொடுக்காம பல்லை சீக்கிரமா பிடுங்கிடுங்க.
டாக்டர்: உங்களை மாதிரி தைரியமான பெண்ணை நான் பார்த்தேயில்லை எங்கே வாயைத் திறங்க.
பெண்: டாக்டர் நீங்க பிடுங்க வேண்டியது என்னுடைய பல் இல்லை என் மாமியார் பல்லை !
2) கன்னத்துல குழி !
நண்பர்1: என் லவர் சிரிச்சா கன்னத்துல அழகா குழி விழும்.
நண்பர்2: இதென்ன பெரிய விஷயமா... என் லவர் சிரிச்சா பல்லே விழும்
3) கழுதைன்னு மட்டும் !
கணவன்: எப்படி வேண்டுமானாலும் திட்டுங்க ஆனா கழுதைன்னு மட்டும் திட்டாதீங்கன்னு சொல்றியே ஏன்?
மனைவி; அப்படி நீங்க திட்டும்போது உங்களை உதைக்கனும்
போல தோணுது அதான் !
4)காதலிச்ச பெண்ணே !
ஜோசியர்: நீங்க காதலிச்ச பெண்ணே உங்களுக்கு மனைவியா கிடைப்பாங்க!
காதலன்: இந்த தோஷத்துக்கு என்ன பரிகாரம் சுவாமி ?!
நம்பிக்கை உண்டா ?
ஒருவர்: உங்களுக்கு பேய், பிசாசுல எல்லாம் நம்பிக்கை உண்டா ?
மற்றவர்; கல்யாணத்துக்கு முன்னாலே கிடையாது.
இப்ப நிறைய உண்டு !
courtesy:http://tamil.in.msn.com/humour/jokes/archive.aspx

பெண்- சில கேள்விகள்
முதன் முதலாக பெண்ணை
வருணிக்கத் தேர்ந்தெடுத்த வார்த்தை எது ?
ஆதாமின் முத்தம் ஏவாளின் எந்த பாகத்திற்கு
முதலில் கிடைத்திருக்கும் ?
பெண்ணின் கூந்தலுக்கு
முதன்முதலில் சூட்டப்பட்ட பூ எது ?
வரதட்சணையால் சபிக்கப்பட்ட
முதல் முதிர் கன்னி
மாத விலக்கு நின்று போனதை
யாரிடம் சொல்லியிருப்பாள் . . .
நன்றி; பழநி பாரதி (காதலன்பின் கதவு-கவிதை தொகுதி)

படித்ததில் பிடித்தது- கவிதை
உடல் இளைக்க கடைப்பிடிக்க வேண்டியவை
கீரைகள் அடிக்கடி சமைத்து சாப்பிடவும்
பொன்னாங்கன்னி கீரைக்கு உடல் பருமனைக்
குறைக்கும் சக்தி உண்டு.
வெந்நீர் சாப்பிடும்போது சிறிது சீரகம் சேர்த்து
போட்டுக் காய்ச்சித் தண்ணீர் குடிக்கவும்.
வெந்நீர் சாப்பிட்டு வந்தால் உடலில் கொழுப்பு
சத்துக்கள் தங்காது.
நெல் பொரி வாங்கி வந்து சுத்தம் செய்து கொதிக்க
வைத்து ஆறியதும், அந்த தண்ணீரைக் குடிக்கவும்.
கொத்தமல்லி,இஞ்சி,மிளகாய் அரைத்து மோரில்
போட்டு குடிக்கலாம்.
உட்காராமல் அடிக்கடி நன்கு நடக்க வேண்டும்.
காய்கறிகளைச் சிறிது வேகவைத்து (உப்புபோடாமல்)
அந்த சாற்றினை சூப் போல குடிக்கலாம்.
பழச்சாறுகள் மட்டும் குடிக்கவும்.
வெள்ளரி,தக்காளி,வெங்காயம் சாலட் செய்து
சாப்பிடலாம்.
நன்றி; மங்கையர் மலர் (ஜூலை 2004)

உடல் நலம்
இராமகிருஷ்ணர் கதைகளில் ஒன்று
பகவான் இராமகிருஷ்ணர் தன் சீடர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்."நீங்கள் ஒரு ஈயாக மாறியுள்ளீர்கள். அப்போது உங்கள் எதிரே அமுதம் நிறைந்த ஒரு கிண்ணம் இருக்கிறது. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?"சுவாமி விவேகானந்தர் எழுந்து தெளிவாக "நான் கிண்ணத்தின் விளிம்பில் உட்கார்ந்து கவனமாக அமுதத்தை பருகுவேன். அவசரப்பட்டு கிண்ணத்தில் உள்ள அமுதத்தில் விழுந்து உயிரை விடமாட்டேன்!" என்றார். சிரித்த குரு, "அமுதத்தை உண்பவர்களுக்கு மரணமே இல்லை. அப்படி இருக்க விளிம்பில் உட்கார்ந்தால் என்ன? அமுதத்திலேயே விழுந்தால் என்ன?!" என்றார்.வாழ்வு ஒரு அமிர்த குளம். உங்களின் சிறிய ஆசைகள் குளத்தின் விளிம்பில் மட்டுமே உட்கார வைக்கும். ஆசைகளைக் கடந்து வாழ்வில் குதித்தால் அல்லல் பட மாட்டீர்கள். அழிந்து போக மாட்டீர்கள். மாறாக ஆனந்தப்படுவீர்கள் என்ற உயரிய தத்துவத்தை மிக எளிமையாக தன்னுடைய சீடர்களுக்கு விளக்கினார் இராமகிருஷ்ணர்.
Labels:
ஆன்மீகம்
I am possible
" you can ", "you will"
If you not, who can I ?
Failure is not a standard one.,
It is only a stepping store to success !
If your are confident,you can !
If you hope, The World is in your hand
Then you can !
" Impossible " itself sounds
Like I"m possible !
So,
If we opne the wings of "trying"
It is not difficult to catch the fruit of victory !
courtesy: New indian Express-achool magazine
(13-10-04)

நம்பிக்கை
ஆஸ்தானக் கவி ஆங்கிலம் படித்தார் !
துளிப்பா ! ;-
ஆஸ்தானக் கவி ஒருவர்
ஆங்கிலம் படித்தார்
தமிழ்ப் படத்தில் பாட்டெழுத !
புதிய நீதி ;-
இனி கண்ணகிகள் நீதி கேட்டு
நெடுந்தொலைவு போகவேண்டியதில்லை...
மதுரையில் வந்து விட்டது
உயர்நீதிமன்றக் கிளை !
மூக்கு கண்ணாடி ;-
வெளியூர் பயண முடிவில்
மனைவிக்கு மல்லிகைப் பூ
மகளுக்கு ஃபேர் அன் லவ்லி
மகனுக்கு ஜீன்ஸ்பேண்ட்
வாங்கும் குடும்பத்தலைவருக்கு
மறந்து போகிறது
அம்மா கேட்கும் மூக்குக் கணைணாடி !
நன்றி; தினகரன் -வசந்தம் (5.9.04)
ஆஸ்தானக் கவி ஒருவர்
ஆங்கிலம் படித்தார்
தமிழ்ப் படத்தில் பாட்டெழுத !
புதிய நீதி ;-
இனி கண்ணகிகள் நீதி கேட்டு
நெடுந்தொலைவு போகவேண்டியதில்லை...
மதுரையில் வந்து விட்டது
உயர்நீதிமன்றக் கிளை !
மூக்கு கண்ணாடி ;-
வெளியூர் பயண முடிவில்
மனைவிக்கு மல்லிகைப் பூ
மகளுக்கு ஃபேர் அன் லவ்லி
மகனுக்கு ஜீன்ஸ்பேண்ட்
வாங்கும் குடும்பத்தலைவருக்கு
மறந்து போகிறது
அம்மா கேட்கும் மூக்குக் கணைணாடி !
நன்றி; தினகரன் -வசந்தம் (5.9.04)
Labels:
படித்ததில் பிடித்தது-கவிதை
உணர்வுகள் மட்டும் பேசட்டும்
கதிரவனும் தாமரையும்;-
காதலன் உன்னை முத்தமிட்டால்
சுடும் என்பதால்
உன்னை நீரில் படைத்தானோ !
இதயம் ;-
பாவி ! நம்பிக்கை துரோகி !
இருப்பது என்னுள்
ஆனால்
விசுவாசம் மட்டும் அவளுக்கு !
பைத்தியம்;-
ஒரு ஆடை கிழிந்த பைத்தியம்
அழகாக கவிதை பாடுகிறது என்று
ஊர் சொல்லக் கேள்விப்பட்டுக்
காணச்சென்றேன் ! ஆச்சரியம் !
சொல்வது உண்மைதான் . . .
எப்படி என்றேன் ?
காதலித்தேன் என்றான் . . .
தவறு'-
தவறுகளை தினமும் புரிவேன் !
உன்னிடம் திட்டு வாங்குவதற்கு !
நன்றி; கார்த்திகேயன் (உணர்வுகள் மட்டும் பேசட்டும்)
- அருணை வெளியீடு.

துளிக்கடல்- இசைஞானி இளையராஜா
விரிவதெல்லாம் வானமில்லை
கற்பிப்பதெல்லாம் கல்வியுமில்லை !
நதி கடலாக முடியாது, கடலில் கலக்கலாம் !
உயிர்கள் இறைவனாக முடியாது
அவனோடு கலக்கலாம் !
என்னால் நான் கொண்ட துயரத்தை
நின்னாலன்றித் தீர்க்க
என்னால் ஆகுமோ ?
சூரியனுக்கு இருளைத் தெரியாது
அறிவுக்கு அறியாமையைத் தெரியாது
உன் மனத்தால் ஏற்பட்ட தளைகளை விட
வேறெந்த தளைகளால்
உன்னைக் கட்ட முடியும் ?
தூக்கம் என்னவென்று தெரியாது
ஏன் தூங்க வேண்டும் ?
விழிப்பு என்னெவென்று தெரியாது
ஏன் விழித்திருக்க வேண்டும் ?
பிறப்பு என்னவென்று தெரியாது
ஏன் இறக்க வேண்டும் ?
இருக்கும்இடத்தை விட்டு
அங்கு இங்கு நகராமல்
காலத்தின் பின்னே செல்ல வேண்டுமா ?
இசையைக்கேள் !
மனிதன் விடுதலை பெற வேண்டியது
தன்னிடமிருந்துதான் !
எடுத்தது பிறப்பில்லை
காத்திருக்கும் இறப்பு !
உன் விளக்கத்தை உன் விளக்கமே
உனக்கு உணர்த்துகிறது !
பாதையானாய் பயணமானாய்
புறப்பட்ட இடமானாய்
அடைகின்ற ஊரானாய் !
MARS -க்கு போகிறாயா ? போ !
எந்த உலகம் போனாலும்
உன்னைத் தொடர்வது மரணம் மட்டுமே !
தலைக்கு மேலே விமானம்
காலின் கீழே மயானம் !
அறிந்ததெல்லாம்
அறியாமையின் முயற்சி
அறியாததெல்லாம்
அறிவிக்கு விளக்கம் !
கல்வி மனிதனிடம் இல்லை
எங்கும் பரந்து கிடக்கிறது !
நன்றி ;இசைஞானி இளையராஜா
(முல்லைச் சரம்-மே 2008)
கற்பிப்பதெல்லாம் கல்வியுமில்லை !
நதி கடலாக முடியாது, கடலில் கலக்கலாம் !
உயிர்கள் இறைவனாக முடியாது
அவனோடு கலக்கலாம் !
என்னால் நான் கொண்ட துயரத்தை
நின்னாலன்றித் தீர்க்க
என்னால் ஆகுமோ ?
சூரியனுக்கு இருளைத் தெரியாது
அறிவுக்கு அறியாமையைத் தெரியாது
உன் மனத்தால் ஏற்பட்ட தளைகளை விட
வேறெந்த தளைகளால்
உன்னைக் கட்ட முடியும் ?
தூக்கம் என்னவென்று தெரியாது
ஏன் தூங்க வேண்டும் ?
விழிப்பு என்னெவென்று தெரியாது
ஏன் விழித்திருக்க வேண்டும் ?
பிறப்பு என்னவென்று தெரியாது
ஏன் இறக்க வேண்டும் ?
இருக்கும்இடத்தை விட்டு
அங்கு இங்கு நகராமல்
காலத்தின் பின்னே செல்ல வேண்டுமா ?
இசையைக்கேள் !
மனிதன் விடுதலை பெற வேண்டியது
தன்னிடமிருந்துதான் !
எடுத்தது பிறப்பில்லை
காத்திருக்கும் இறப்பு !
உன் விளக்கத்தை உன் விளக்கமே
உனக்கு உணர்த்துகிறது !
பாதையானாய் பயணமானாய்
புறப்பட்ட இடமானாய்
அடைகின்ற ஊரானாய் !
MARS -க்கு போகிறாயா ? போ !
எந்த உலகம் போனாலும்
உன்னைத் தொடர்வது மரணம் மட்டுமே !
தலைக்கு மேலே விமானம்
காலின் கீழே மயானம் !
அறிந்ததெல்லாம்
அறியாமையின் முயற்சி
அறியாததெல்லாம்
அறிவிக்கு விளக்கம் !
கல்வி மனிதனிடம் இல்லை
எங்கும் பரந்து கிடக்கிறது !
நன்றி ;இசைஞானி இளையராஜா
(முல்லைச் சரம்-மே 2008)
Subscribe to:
Posts (Atom)