படம், அமெரிக்காவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
அமெரிக்காவில் சுமார் 50 நகரங்களில் தசாவதாரம் திரையிடப்பட்டுள்ளது. இந்தத் திரையரங்குகளில் வார இறுதி நாட்களில் அனைத்துத் தியேட்டர்களிலும் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளதாம்.
வசூலைப் பொறுத்தவரையில், வார இறுதி நாட்களில் இதுவரை எந்த தென்னிந்தியப் அமெரிக்காவில் தசாவதாரம் படங்களுக்கும் கிடைத்திராத அளவு தசாவதாரத்திற்கு வரவேற்புக் கிடைத்துள்ளதாம்.
தசாவதாரத்தின் தெலுங்குப் பதிப்புக்கும் பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது. சரியாகச் சொல்வதானால் தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் படங்களுக்கு இணையான வரவேற்பு தசாவதாரத்திற்குக் கிடைத்துள்ளதாம்.
அமெரிக்கர்களும் படத்தைப் பார்க்கத் திரளுகிறார்கள். படத்தின் ஸ்பெஷல் எபக்ட்ஸ் சிறப்பாக இருப்பதாக அவர்கள் பாராட்டுகிறார்களாம். (டிஎன்எஸ்)
courtesy:www.tamil.sify.com

0 comments:
Post a Comment