கண்ணாடிச் சிறகு

வேலியோரம் ஆற்றோரம்
செடியோரம் என
எங்கு போனாலும் என்னோடு
தொட்டு விளையாடக்
கட்டாயம் வரும் தும்பி

கண்ணாடிச் சிறகும் பளிங்குக்
கண்ணுமாய் மிருதுவாய்ப் பிடித்து
உள்ளங்கையில
ஒரு கல் வைத்து

''கல்லத் தூக்கு கருப்பட்டி தாரேன
கல்லத்தூக்கு கருப்பட்டி தாரேன்''
எனப் பாடுகையில்
என் உள்ளங்கையில்
குறு குறுவெனக் கவிதை எழுதும்

இன்றும் அந்த வேலியோரம்
ஆற்றோரம் செடியோரம்
சுற்றிக் கொண்டுதான் இருக்கும்
அதன் பரம்பரை

பதிமூன்றாம் நபராய்ப்
பந்து பொறுக்கிப் போடும்
ஏதாவது ஒரு சிறுவனின்
கண்ணில் படாதா அது
கவிதை சொல்லித் தர.
------------------------------------------------------
படித்ததில் ரஸித்த கவிதை
கவிதையாக்கம்; தேன்மொழி
(இசையில்லாத இலையில்லை-கவிதை தொதுதி)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது