அழகு என்றால் என்ன ?

அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல் நம் மனதிலும் உள்ளது. நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி. அதிக எடை இதற்கு முக்கியமான எதிரியாகும் எங்கு பார்த்தாலும் எடை குறைப்பு பற்றிய பேச்சு, விளம்பரங்கள், டீ.வியும், திரைப்படங்களும் தினமும் உயரமான, எடை குறைவுள்ள மாடல்களையும், நடிகர்களையும் பார்த்துப் பார்த்து, ஒல்லியாக இருப்பதே அழகு என்ற எண்ணம் நம் மனதில் வேறூன்றி விட்டது.

முதலில் உங்கள் உடலை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவு, ஓய்வு, தூக்கம், உடல் பயிற்சி இவைகளால் உங்கள் உடல் நலன் கூடும். அத்தோடு உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

கீழே உள்ள குறிப்புகளை பின்பற்றி ஆரோக்கியமான, அழகாக உள்ள உணர்வை, பெறலாம்.

உடலின் பராமரிப்பு:- நமது உடல் கூறு அதிசயமான உள்ளங்களை உள்ளடக்கியது இதை நல்ல முறையில், பேணி காப்பது நம் கடமையாகும்.

உடலுக்கு சலுகைகள்:- உடலுக்கு அவ்வப்போது சலுகைகள் அவசியம். மஸ்ஸாஜ் செய்து கொள்வது, புதிய உடை வாங்குவது, மேனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்வது. இது போன்ற சலுகைகளில் உங்களுக்கு தன்னம்பிக்கையும், உங்கள் உடலைப் பற்றிய நல்ல உணர்வும் ஏற்படும்.

உங்கள் தேவை:- உங்களுக்கு வாழ்வில் எது தேவை என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள் மேற்கத்திய நாடுகளில் பெண்கள் தங்கள் அழகையும், உடலையும் பாதுகாப்பதில் தான் அதிகமான நேரத்தை செலவிடுகின்றனர்.

உங்கள் பழக்கங்கள்:- கண்ணாடி முன் நின்று 100 முறை உங்கள் மூக்கை பார்ப்பதற்கு பதிலாக வேறு வேலைகளில் கவனத்தை செலுத்தவும். உங்கள் மூக்கு மட்டுமே நீங்கள் என்ற எண்ணத்தை முதலில் விடவும்.

உண்மையை ஒத்துக் கொள்ளவும்:- ஐஷ்வர்யாராய் போல் தோன்ற வேண்டும் என்று எண்ணம் இருந்தால் அதை விட்டு விடுவது நல்லது. அவர் அவர் தான், நீங்கள் நீங்கள் தான். அவர் அழகு தான் ஆனால் அவர் மட்டுமே அழகு என்று நினைப்பது சரியல்ல.

சரியான பார்வை:- பட்டினி கிடந்து உடல் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்வது தான் அழகாக தோன்ற வழி என்று நினைப்பது தவறு. எது உங்களுக்கு சரி என்று முதலில் தீர்மானிக்கவும். தேவையான உடல் பயிற்சி, சரியான உணவு இவையெல்லாம் தான் அழகை மேம்படுத்தும்.

நீங்கள் தனி மனிதர் இல்லை:- இதே பிரச்சனை அதிகப்பட்சமான பெண்களுக்கு உண்டு என்பதை புரிந்துக் கொள்ளவும். இந்த பிரச்சனையில் முழ்காமல் இருப்பது உங்களை கையில் உள்ளது.

எது அழகு, யார் சிறந்தவர் என்று மற்றவர் சொல்வதை நம்பாதீர்கள். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பதை மறந்து விடாதீர்கள்.

courtesy:www.tamil.webdunia.com

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது