என் குட்டித் தேவதைக்கு....

என் குட்டித் தேவதைக்கு....

நீ கண்டுபிடிக்க வேண்டுமென்பதற்காகவே
இலகுவான இடத்தில் ஒளிந்து
"எப்படியடி தெரிந்தது?" நான் பிரமிக்கையில்,
பெருமிதத்தில் நீ சிரிக்கும் பத்துப்பல் சிரிப்பு...

வேண்டுமென்றே கை விரல்களைத் தவறுதலாய் எண்ணி,
"ஐயோ! தெரியலியே" தவிக்கையில்,
குழந்தை மொழியில் நீ கூட்டிக் கழித்துச் சொல்லி
ஜெயித்து விட்டதாய் கையுயர்த்தும் அழகு...

பஞ்சுப் பொம்மையைத்
தூக்க முடியாமல் கீழே போட்டு
கைவலிப்பதாய் நடிக்கையில்,
தூக்கிக்கொண்டு ஓடும் உன் துறுதுறு குறும்பு...

இப்படி ஒன்றும் தெரியாதவளாய்
நான் நடிப்பதெல்லாம்
உன்னை எல்லாம் தெரிந்தவளாய்
ஆக்கத்தான் என் குட்டி தேவதையே!

நன்றி: லதா பிரபாகர், அவள் விகடன்
courtesy:rsiththavai.blogspot.com

2 comments:

Anonymous said...

தலையில முக்காடு போட்டுக்கிட்டு அப்பாவ காணோம்னு சொல்லும்பொழுது அந்த துணிய இழுத்து போட்டுட்டு ஏதோ பின்லேடனையே கண்டுபிடிச்சமாதிரி ஒரு சிரிப்பு சிரிக்கும்பாருங்க.அந்த பரவசத்தையெல்லாம் எப்படி சொல்றதுண்ணு தெரியல.

அருமையாக எழுதுகிறீர்கள்.தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்.

Anonymous said...

கமெண்ட் மாடரேசன் போட்டுங்குங்க.
தேவையில்லாத் பின்னூட்டங்களை தவிர்க்கலாம்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது