நிழலுக்காய்ப் போனேன்
மரநிழல் நீண்டு கிடந்தது
இலை நிழல்கள் ஆடின
கொடி நிழல் விரல்களைச் சுற்றியது
பழ நிழலைப் பாதம் சூடியது
என் கண்கள் நிழலிடையே தெறிக்கையில்
மேக நிழல்
நிழலையெல்லாம் கவ்வியது
சற்றே
சூரியன் வெயிலை அவிழ்க்கையில்
பூ நிழலைப் பற்றிச் சொல்ல
வார்த்தை ஏது. . .
--------------------------------------------------------------------------------------------------நன்றி; கவிஞர் தேன்மொழி(இசையில்லாத இலையில்லை)
0 comments:
Post a Comment