குறுந்தொகை

விடிகாலை நீ தூங்க
விண்மீனில் விளக்கு வைப்பேன்
வெந்நீரில் நீ குளிக்க
விறகாகி தீக்குளிப்பேன்.

சுடிதாரில் கண்ணாடியா?
வைரம் வாங்கி பதிச்சி வைப்பேன்
சலூனுக்குப் போகணும்னா
சிங்கப்பூர் அனுப்பி வைப்பேன்

சாதா டி.வி.போரடிச்சா
சன் டிவி.கனெக்சன் வைப்பேன்
சுந்தர ராமசாமி
சுஜாதா புக்கு வாங்கி வைப்பேன்

சனிக்கிழமை சாயங்காலம்
ஸ்டார் ஓட்டல் கூட்டிப் போவேன்
சினிமாதான் வேணுமுன்னா
ஹோம் தியேட்டம் கட்டி வைப்பேன்

மெட்ரோ வாட்டர் வேணான்டி
நெய் ஊத்தி சமைக்கச் சொல்வேன்
மாசத்துல முப்பது நாள்
பட்டுப் புடவை எடுக்கச் சொல்வேன்

டவுன் பஸ்ஸில் கூட்டமடி
டாட்டாசுமோ அனுப்பி வைப்பேன்
நாய்க்குட்டி அது எதுக்கு?
மான் குட்டி வளர்க்கச் சொல்வேன்

என்றெல்லாம் வாக்கு தந்து
ஏமாற்ற மாட்டேன்டி
என சம்பளம் ஆயிரம்தான்
அதுக்குள்ளே வாழலாம் வா!
------------------------------------------------------------
இது நான் படித்து ரஸித்த கவிதைகளில் ஒன்று.வானை வில்லாக
வளைப்பேன் என்றெல்லாம் கதையளக்காமல் உண்மை நிலை கூறி,
கூடி வாழ காதலியை அழைக்கிறான்....
கவிதையாக்கம்; நா.முத்துக்குமார்(குமுதம்-12-7-04 )

1 comments:

said...

நண்பரே!
வாய்ப்பு கிடைத்தால் நா.முத்துகுமாரின்
"தூர்" என்ற கவிதையை படித்து பாருங்கள்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது