கண்ணகியிடம் நெருப்புக் கேட்கப் போகிறேன்
அவளுக்கு மாற்றாய் கற்பு நிறைந்திருக்கறது
என்னிடம்-ஆனால்
காற்கொலுசு இல்லை-இருந்த ஒன்றும்
மணவாளனின் பாக்கியத்தால்
மார்வாடிக்கடைக்குச் சென்றிருக்கிறது
மாமியாரின் மண்ணெண்ணை சொற்களுக்கு மத்தியில்
மணவிலங்காய்
மங்கல நாணும் பூட்டியிருக்கிறேன்
சீதனம் தேடி தந்தை வீட்டிற்கும்
வாழ்வைத்தேடி வந்தவன் வீட்டிற்கும்
அலைந்தாகி விட்டது
கண்ணகியிடம் நெருப்புக் கேட்கப் போகிறேன்
கணவன் வீட்டுக்கு தீ வைக்க!
நன்றி; ந.ப.சந்திரன்,ஆம்பல்(சாவி-3-10-90)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment